Posts

Showing posts from June, 2021

"அவநம்பிக்கையை போக்குவீர்!" - அட்மிஷன் கூடும் அரசுப் பள்ளிகள் Vs தனியார் பள்ளிகளின் நிலை!

Image
கொரோனா பேரிடர் காரணமாக 2020-ம் ஆண்டு முதல் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், பல தனியார்ப் பள்ளிகளில் மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஏன் கட்டாயப்படுத்தப்பட்டது என்றே சொல்லலாம். லாக்டவுன் காரணமாக பலர் தங்கள் வேலையை இழந்து, வருமானம் இல்லாமல் இருந்ததால் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்தச் சூழலைச் சமாளிக்கவும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கவும் முடிவு செய்த பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளையே நாடினர். இதன் காரணமாக லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை, அதற்கு முந்தைய இரண்டு கல்வி ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்தது. அதாவது 2018-19ம் கல்வி ஆண்டில் 8,000 மாணவர்களும், 2019-20ம் கல்வி ஆண்டில் 10,000 மாணவர்களும் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். அதுவே 2020-21ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை வழக்கத்தைக் காட்டிலும் 1 ல...

சத்தியமங்கலம்: பள்ளி பாடம் மறக்காமல் இருக்க டியூசன் எடுக்கும் பழங்குடியின தம்பதி

Image
கொரோனா பரவலை தடுக்க  பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் மாணவ மாணவிகள் பள்ளியில் படித்த பாடத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காக பழங்குடியின தம்பதியினர் நாள்தோறும் டியூசன் எடுத்து வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில், காளிதிம்பம் மலைக்கிராமம் அமைந்துள்ளது. மானாவாரி விவசாயத்தை நம்பி இக்கிராமத்தில் 75 பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. யானைகள் அடிக்கடி விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயத்தில் போதிய வருவாயின்றி இருப்பதால் இங்குள்ள பழங்குடியின குழந்தைகள் மேல்நிலைக்கல்வி படிக்க தலமலை, கேர்மாளம், ஆசனூர் உண்டு உறைவிடப்பள்ளிக்கு செல்கின்றனர். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் கடந்த ஒராண்டாக மூடப்பட்டு தங்கும் விடுதிகளில் இருந்த குழந்தைகள் மீண்டும் காளிதிம்பம் கிராமத்துக்கு வந்துவிட்டனர். பள்ளி மூடப்பட்டதால் குழந்தைகள் பெற்றோருடன் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொலைத்தொடர்பு வதியில்லாத இக்கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூரத்தி என்ற பழங்குடியின இளைஞர் ஆரம்ப கல்வி முதல் மேல்படிப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து தற்போது இயற்ப...

'அரசுப் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் தனியார் பள்ளி மாணவர்கள்' - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

Image
அரசுப் பள்ளிகளை நோக்கி தனியார் பள்ளி மாணவர்கள் படையெடுத்து வருவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக தனியார் பள்ளி மாணவர்கள், சிபிஎஸ்சி மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் மீது ஏற்பட்டுள்ளத் தாக்கம் வரவேற்புக்குரியது.   கடந்த காலங்களில் தனியார் பள்ளிகளின் மீதிருந்த மோகம் படிப்படியாகக் குறைந்து அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. இதன் தாக்கத்தின் எதிரொலியாகப் பல தனியார் பள்ளிகள் மூடும் சூழல் உருவாகியுள்ளது.    மேலும் அரசின் அதிரடி நடவடிக்கையாக அரசுப் பள்ளிகளில் சேர, எட்டாம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என்ற அறிவிப்பு பெற்றோர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் த...

அணுசக்தி துறை தேர்வுக்கு தமிழகத்திலும் தேர்வு மையம் வேண்டும் - மதுரை எம்பி சு.வெங்கடேசன்

Image
அணுசக்தி துறை தேர்வுக்கு தமிழகத்திலும் ஒரு தேர்வு மையத்தை அறிவிக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.  அணுசக்தி துறை தலைவர் டாக்டர் தினேஷ் ஸ்ரீ வஸ்தவாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், “அணு எரி பொருள் வளாகம் இம்மாதம் 21ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிக்கையில்  Stage I Priliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category - I, Post Code 21901- 21911. Advertisement No. NFC/02/2019  நியமன முதல்படித் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்திருந்தது. இத்தேர்வு எழுத நாடு முழுவதும் 6 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்கள் பெங்களூரில் போய் தேர்வெழுத வேண்டும் என்ற நிலை உள்ளது. தனித்திரு என்கிறது அரசின் கோவிட் வழிகாட்டுதல் விதிமுறை. ஆனால் மாணவர்களை மாநிலம் விட்டு மாநிலம் அலையவிடுகிறது ஒன்றிய அரசு. கோவிட் பெருந் தொற்றின் இரண்டாவது அலை முடியவில்லை. ஜுன் 28 அன்று கூட கர்நாடகா முழுவதும் 2576 புதிய தொற்றுகள், 93 மரணங்கள். இவற...

நீட் தேர்வு தொடர்பாக இதுவரை 86,342 பேர் கருத்துகளை அனுப்பியுள்ளனர் - நீதியரசர் ஏ.கே.ராஜன்

Image
நீட் தேர்வு தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் நிறைய கருத்துகள் வந்திருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தாக்கம் குறித்த மூன்றாம் கட்ட ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 86 ஆயிரத்து 342 பேரிடம் இருந்து நீட் தேர்வுகள் குறித்த கருத்துகள் வந்திருப்பதாகவும், அனைத்தையும் ஆராய்ந்த பிறகே அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் கூறினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/107926/AK-Rajan-said--they-have-received-86-342-opinions-about-NEET.html

நீட் பாதிப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

Image
நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிவதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்த தமிழக அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்தது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கவேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதை ரத்து செய்யக்கோரியும் கே.நாகராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். (இவர் தமிழக பா.ஜ.க.-வின் பொதுச் செயலாளராக இருப்பதாக மனுவில் கூறியுள்ளார்). அந்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மர...

ஆகஸ்ட் 1-க்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி

Image
ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகுதான் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். அத்துடன் விதிகளை மீறும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/107915/Minister-Ponmudi-said-college-admissions-will-start-only-after-August-1.html

பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள்: எஸ்கேஎம்

Image
போராட்ட பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என சம்யுக்ட் கிசான் மோர்ச்சா(எஸ்கேஎம்)   கோரி க்கை வைத்துள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நட க்கும் ஏழு மாத தொடர் போராட்டங்களைக் குறிக்கும் வகையில் , விவசாயிகள் சனிக்கிழமையன்று பல்வேறு மாநிலங்களில் உள்ள ராஜ் பவனை நோக்கி சென்று  ஆளுநர்களிட மு ம் நினைவுக்குறிப்பை சமர்ப்பிக்க பேரணியாக அணிவகுத்துச் சென்றனர் . இது தொடர்பாக சண்டிகரில் , 147, 148, 149, 186, 188, 332 மற்றும் 353 ஐபிசி பிரிவுகளின் கீழ் பல எஸ் . கே . எம் தலைவர்கள் மற்றும் பல விவசாயிகள் அமைப்பின் தலைவர் களுக்கு எதிராக எஃப் . ஐ . ஆர் பதிவு செய்யப்பட் டு ள்ளது. “ இந்த பேரணியின்போது சாலைகளைத் தடுத்து நிறுத்திய போலீசார், எங்கள் மீது தண்ணீர் பீரங்கிகள் மற்றும் தடியடியை பயன்படுத்தவும் முயன்றனர் . இத்தகைய ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார நடத்தைக்கு ம் மே லாக , இப்போது எஸ் . கே . எம் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட...

மேட்டூர் அணை திறப்பு: திருவாரூரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

Image
மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளை வந்தடைந்ததால் திருவாரூரில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 85 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணியில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே ஆழ்துளை பம்பு செட் நீரை பயன்படுத்தி இந்த குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆறுகளில் தண்ணீர் வந்ததால் மீதம் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளனர். 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி ...

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது எப்படி? - தமிழ்நாடு அரசு விளக்கம்

Image
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிடுவது எப்படி என அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம்: பிளஸ் 2 மாணவர் ஒருவர் 10-ஆம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50% கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அம்மாணவர் 11ஆம் வகுப்பில் எழுத்து முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 20% கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு மதிப்பெண்களில் 30% கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 12-ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வுக்கு 20, அக மதிப்பீடுக்கு 10 என மொத்தம் 30க்கு பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் கொள்ளப்படும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் 10 அக மதிப்பீடு மதிப்பெண்கள் 30க்கு மாற்றப்பட்டு கணக்கில் கொள்ளப்படும். கொரோனாவால் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்றிராத பட்சத்தில் அவர்களின் 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் மாணவர் பங்கேற்றிர...

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள்

Image
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 200 நாட்களுக்கு மேலாக பல்வேறுகட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அதரவாகவும், இவர்களை அழைத்துப் பேசாத மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை இங்கு பார்க்கலாம். திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரதான சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் 200 நாட்களுக்கு மேலாக நடைபெறும் விவசாயிகள் போராட்ட கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் தங்களை டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திறகு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர். இதற்காக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும், விவசாயிகள் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர்: கடலூர் படைவீரர் மாளிகை எதிரில் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக மத்த...

’கல்வி தொலைக்காட்சியை பாருங்கோ’ - தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமை ஆசிரியர்

Image
திருச்சியில் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், கல்வித் தொலைகாட்சி மூலம் மாணவர்கள் கல்விபயில வேண்டுமென தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆன்-லைன் மூலம் பாடம் கற்கும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியின் முழு பயனையும் அடைய வேண்டுமென தலைமை ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/107724/Students-watch-educational-television-Tandora-is-the-head-teacher-who-raises-awareness.html

மதிப்பெண்களில் திருப்தியடையாத தேர்வெழுத விரும்பும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு

Image
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், முந்தைய வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், மதிப்பீட்டு முறையில் ஒதுக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும், அவர்கள் விரும்பினால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பு தேர்வு எழுதலாம் எனவும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/107717/Special-exams-for-willing-CBSE-students.html

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : மத்திய வேளாண் அமைச்சர்

Image
தொடர் போராட்டங்களை நடத்தி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாய சங்கத்தினர் 7 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாரதிய கிசான் சங்கம் தலைவர் நரேஷ் திகாயத் அழைப்பின் பெயரில் மேற்கு உத்தரப் பிரதேச பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் காசிப்பூர் போராட்ட தளத்திற்கு டிராக்டர்களில் வந்துள்ளனர். இதனால் அடுத்த சில நாட்களில் போராட்டம் மேலும் தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக விவசாயிகள் கூறியிருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் தோமர், 11 முறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதும் நியாயமான கோரிக்கைகள் வந்தால் நிச்சயமாக கலந்து ஆலோசிப்போம் என்றும் கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/107663/Ready-to-negotiate-with-farmer...

M.Phil படிப்பு கைவிடப்படுகிறது - சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு

Image
2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.  சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளிலும் M.Phil படிப்பு கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே M.Phil படிப்பில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/107667/M-Phil-course-dropped---University-of-Chennai-Announcement.html

நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்... மழையில் வீணாவதால் விவசாயிகள் வருத்தம்

Image
அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் 10 நாட்களுக்கும் மேலாக நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் மழையில் நனைந்து நெல்மூட்டைகள் சேதமடைவதைக் கண்ட விவசாயிகள் வேதனையுடன் காத்திருக்கின்றனர். திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள தனியார் இடத்தில் அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மணிகண்டம், புங்கனூர், மேக்குடி, பாகனூர், அரசங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தனியாரிடம் குறைந்தவிலைக்கு விற்பனை செய்ய மனமின்றி சொற்ப லாபத்திற்காக தாங்கள் விளைவித்த நெல்லை இங்கு கொண்டுவந்துள்ளனர். சுமார் 10-15 நாட்களுக்கு மேலாக நெல்லை கொட்டிவைத்து விற்பனை செய்வதற்காக காத்திருக்கும் விவசாயிகளிடம் குடோனில் இறக்குவதற்கு இடமில்லையென்றும், லாரிகள் குடோனில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக காரணத்தைக் கூறி நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்திவருகின்றனர். இதனால் நேற்று மட்டுமன்றி அவ்வப்போது பெய்துவரும் மழையால் கொட்டப்பட்டுள்ள நெல் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், 5 நாட்கள் காத்திருந்து 4 ஆயிரம் செலவுசெய்து மீண்டும் அந்த நெல்லை காயவைத்...