Posts

Showing posts from November, 2021

கல்வி சான்றிதழ்களுக்கு 18% ஜிஎஸ்டி: யார் யாருக்கு பொருந்தும்? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

Image
கல்விச் சான்றிதழ்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், 'புதிய தலைமுறை'க்கு விளக்கமளித்துள்ளார்.   அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளதாகவும், அதில் சான்றிதழுகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும், இதற்கான புதிதாக ஒரு ஜிஎஸ்டி பதிவு எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.   இந்நிலையில் கல்விச் சான்றிதழ்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் , 'புதிய தலைமுறை'க்கு விளக்கமளித்துள்ளார். அதில் அவர், ''அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் கல்வி ஆண்டு பயிலும் நேரத்தில் எந்த ஜி.எஸ்.டி யும் இல்லை. மாணவர்களாக கல்வி ஆண்டு முடித்து வெளியே சென்ற பிறகு சில சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். அதுவும் இடமாற்றம் சான்றிதழ், நகல் சான்றிதழ், வேலைக்கு செல்ல ...

கனமழை: புதுக்கோட்டை, திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

Image
புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்துவரும் நிலையில், 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைப்படிக்க... ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/123060/Heavy-rain-Holiday-for-schools-in-Pudukottai--Thiruvarur.html

பட்டப்படிப்பு,மதிப்பெண் சான்றிதழ், விடைத்தாள் நகல் பெற 18% ஜிஎஸ்டிவரி: அண்ணா பல்கலைக்கழகம்

Image
பட்டப்படிப்பு, மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், விடைத்தாள் நகல் உள்ளிட்டவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குதல், செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த உடன், அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் அதன் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இடப்பெயர்வு சான்றிதழ் வழங்குதல், பட்டப்படிப்பு, மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், தொலைந்துபோன சான்றிதழ்களுக்கு மாற்றாக புதிய சான்றிதழ்கள் வழங்குதல், விடைத்தாள் நகல் கோருதல் உள்ளிட்டவற்றுக்கு 18% GST வரி விதிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இருப்பினும் வழக்கமான தேர்வுக்கட்டணம், பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்று விநியோகம், மதிப்பெண் சான்றிதழ், மறு மதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு GST வரியில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழக...

திருவாரூர்: இடிந்துவிடும் அபாயத்தில் பூந்தாழங்குடி பள்ளிக்கட்டடம் – மக்கள் அச்சம்

Image
திருவாரூர் மாவட்டம் பூந்தாழங்குடி ஊராட்சியில் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த  50 ஆண்டுகளுக்கும் மேலாக பூந்தாழங்குடி ஊராட்சியில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள் இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 60 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த கட்டிடம் பழுது பார்க்கப்பட்டு உள்ளது. இருந்தபோதும் தற்போது இந்த கட்டிடத்தின் நிலை மிக மோசமாக உள்ளது, கட்டிடத்தின் மேற்கூரை மிக மோசமாக பாதிப்படைந்து, மேற்கூரையில் உள்ள இரும்பு கம்பிகள் தெரியும் அளவிற்கு உள்ளன. மாணவர்கள் பள்ளியில் பாடம் படித்துக் கொண்டிருக்கும் போதே மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சி பொறிந்து கொட்டுகின்றன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளியில் பயின்று வருகிறார்கள், ஆகவே உடனடியாக அரசு தலையிட்டு புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டி தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள் இந்த பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருக்கும் அங்கன்வாடி கட...

பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Image
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காஞ்சிபுரத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.  காஞ்சிபுரத்தில் பெருநகர் மாதிரி பள்ளியில் ஆய்வகத்தை திறந்துவைத்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளரிடம் பேசியபோது, ’’செப்டம்பர், நவம்பர் மாதத்தில் இருந்துதான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுகுறித்து அச்சம் அடையக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. ஜனவரி மாதத்தில் மாதிரித் தேர்வுகள் நடைபெற்று, வழக்கம்போல் பொதுத்தேர்வானது மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் நடைபெறும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு உள்ளது. அதே விழிப்புணர்வு தனியார் பள்ளி ஆசிரியர்களிடமும் அதிகரிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளியில் பாலியல் தொடர்பான பிரச்னை இருந்தால் அதை மறைக்காமல் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான், மூடி மறைக்காமல் அரசின் கவனத்திற்...

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிப்பு

Image
கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் நடுவே பராமரிக்கப்பட்ட மரங்களால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சிலர் தென்பெண்ணை ஆற்றின் நடுவே மரங்கள் வளர்த்து விவசாயம் செய்தது வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயிர்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மரங்கள் அடைத்ததால் தண்ணீர் செல்லமுடியாமல் ஆற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/122904/Crops-affected-by-floods-in-ThenPennai-river-at-Cuddalore.html

கல்லூரிகளில் சுழற்சி முறைக்கு முற்றுப்புள்ளி - 6 நாள் நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவு

Image
தமிழ்நாட்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர், கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக சுழற்சி முறையில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை அதுமட்டுமல்லாமல், ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும்,மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி, உரிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும் எனவும் உயர் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122850/H...

திருவாரூர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை காக்க விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள்

Image
திருவாரூர் மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் பயிர்களுக்கு உரங்கள், நுண்ணூட்டங்கள், பூச்சி மருந்துகள் முதலானவற்றைத் தெளித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி பயிர்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தன. தற்போது கடந்த சில தினங்களாக நல்ல வெயில் அடிப்பதால் பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் நீர் வடிந்து பயிர்கள் தெரிய ஆரம்பித்து உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழையால் பாதிக்கப்பட்டிருந்த பயிர்கள் நல்ல வளர்ச்சி மற்றும் விளைச்சலைக் கொடுக்கவும், அந்தப் பயிர்கள் முழுமையாக காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும், அதற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக விவசாயிகள் பூச்சி மருந்துகள், உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்களை பயிர்களுக்கு அளித்து வருகின்றனர். தமிழக அரசு தற்போது சம்பா தாளடி முழுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 6000 ரூபாய் இடுபொருள் உரங்கள் வ...

“தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்” - பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ்!

Image
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார். எதிர்வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட உள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த பலனாக இது பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார் பாஜகவின் உன்னாவ் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சாக்ஷி மகராஜ்.  “உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் பிரதமர் மோடிக்கும், உத்தரப் பிரதேச முதல் யோகி ஆதித்யநாத்துக்கும் மாற்றே இல்லை. சட்டத்தை விட தேசம் தான் முக்கியம் என்ற முடிவின் மூலம் தனது பெரிய மனசை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்” என தெரிவித்துள்ளார் அவர்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/122778/If-it-is-needed-we-will-bring-back-the-Farm-laws-says-BJP-MP-Sakshi-Maharaj.html

“வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம்” - ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா

Image
தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை யன்று ரத்து செய்தார். இது குறித்து பேசிய  ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா , “ விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களின் சாதகங்களை விளக்க அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அவர்கள் அச்சட்டங்களை ரத்து செய்வதில் உறுதியாக இருந்தனர். தற்போது இச்சட்டங்களை திரும்பப் பெற்று , தேவைப்பட்டால் பின்னர் மீண்டும் கொண்டுவரலாம் என்று அரசாங்கம் கருதுகிற து” என தெரிவித்தார் பாஜக எம்பி சாக்ஷி மகாரா ஜும் , “ வேளாண் சட்டங்களுக்கும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை , பிரதமருக்கு தேசம்தான் முதலில். மசோதாக்கள் வருகின்றன , அவை ரத்து செய்யப்படுகின்றன , அவை மீண்டும் வரலாம் , மீண்டும் வரைவு செய்யப்படலாம் ” என தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு வேளாண் சட்ட ங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என்று ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஏற்கனவே விவசாயிகளுக...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் அறிவிப்பு

Image
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கற்பித்தல் பணியில் 36 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஆர்.எம்.கதிரேசன். தற்போது துணைவேந்தராக பொறுப்பேற்கும் இவர், பணியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார் என கூறப்படுகிறது. முன்னதாக இவர் மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராக பதவி வகித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122671/R-M-Kadhiresan-takes-in-charge-as-New-Vice-Chancellor.html

பாலியல் துன்புறுத்தலால் கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: ஓபிஎஸ் இரங்கல்

Image
பாலியல் துன்புறுத்தலால் கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்திருக்கிறார் இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. — O Panneerselvam (@OfficeOfOPS) November 20, 2021 அந்த மாணவிக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்க...

“வெட்கக்கேடானது, முற்றிலும் நியாயமற்றது”-வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்புக்கு கங்கனா காட்டம்

Image
இந்திய சினிமா நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தியுள்ளார் அவர்.  நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டி விவசாயிகள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லி எல்லையில் தற்காலிகமாக முகாம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்து வந்தனர் அகில இந்திய விவசாயிகள். இந்த நிலையில், பிரதமர் மோடி, தனது அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.  அதையடுத்து, இந்த சட்டத்தை எதிர்த்த பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றது குறித்து நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.  “சோகமான, வெட்கக்கேடான, முற்றிலும் நியாயமற்றது…” என மிகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் அவர்.  “ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றாக வீதிகளில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்...

”ஜனவரி 20-க்குப் பின் செமஸ்டர் நடத்தப்படும்” - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

Image
ஆன்லைன் தேர்வு குறித்து மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தற்போது செய்தியாளர்களை சந்தித்து அதுகுறித்து பேசியுள்ளார். அப்போது பேசுகையில், “11 அமைப்புகளுடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தேர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் பலரும் ‘ஆன்லைன் தேர்வு வேண்டாம் - ஆப்லைனில் தேர்வு நடத்தும்பட்சத்தில் கால அவகாசம் வேண்டும்’ என கேட்டுள்ளனர். இந்த கால அவகாசத்தில், அதிகபட்சமாக 1 மாதம் கேட்கப்பட்டது. கால அவகாசம் கூடுதலாக அளித்து, அந்த கோரிக்கையை ஏற்கிறோம். அதன்படி, நவம்பரிலிருந்து 2 மாதம் அவகாசம் தரப்படுகிறது. இதன்படி, ஜனவரி 20ம் தேதிக்குப் பின் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும்” என்றார் அமைச்சர் பொன்முடி. முன்னதாக கல்லூரிகள் வழக்கம்போல செயல்பட துவங்கியதை அடுத்து, தேர்வுகள் ஆன்லைன் இல்லாமல் வழக்கம்போல ஆஃப்லைனில் கல்லூரி வளாகத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ‘ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும்’ என வலியுறுத்தி ஈரோடு, மதுரை என பல இடங்களில் மா...

வேளாண் சட்டங்கள் வாபஸ்: தமிழக தலைவர்கள் வரவேற்பு

Image
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகளை இங்கு பார்க்கலாம். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என அறிவித்த மோடி தலைமையிலான மத்திய அரசு, இன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகளை இங்கு பார்க்கலாம். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி, தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கதக்க அறிவிப்பு - கே.பாலகிருஷ்ணன் பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறேன், ஆனால், இது தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாக நான் பார்க்கிறேன் - ப.சிதம்பரம் இன்றைய சூழலை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்கள் திரு...

உதவிப் பேராசிரியர்கள் தேவை - சென்னை ஐ.ஐ.டி. அறிவிப்பு

Image
சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில் காலியாக உள்ள 49 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.   பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 49 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் www.iitm.ac.in இணையதளத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களை https://ift.tt/3Dw1Xf6 இணையதளத்தில் அறியலாம்.   இதையும் படிக்கலாம்: 'ஆப்' இன்றி அமையா உலகு 10: Water Reminder - தண்ணீர் பருக நினைவூட்டும் அசத்தல் ஆப்! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122528/Chennai-IIT-Announcement-has-been-issued-for-the-selection-of-49-vacant-Assistant-Professors-in-the-College.html

பெரம்பலூர்: தொடர் மழையால் 1,500 ஏக்கர் சின்ன வெங்காயப் பயிர்கள் நாசம் - விவசாயிகள் வேதனை

Image
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவிலான சின்ன வெங்காயப் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. பட்டறையில் பாதுகாத்து வைத்திருந்த வெங்காயங்களும் முளைக்கத் தொடங்கிவிட்டதால் விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   தமிழகத்தின் 50 சதவிகித சின்ன வெங்காய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் வருடந்தோறும் சுமார் 8 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த பருவத்தில் தொடர் மழையால் சாகுபடி பரப்பு சுமார் 1,700 ஹெக்டேர் என்றளவில் சுருங்கிப் போனது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி சின்ன வெங்காயப் பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளன. இதனால் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் அறுவடை செய்த வெங்காயமும் காயவைக்க முடியாததால் வயல்களிலேயே விவசாயிகள் வைத்துவிட அவையும் முளைக்க தொடங்கியுள்ளது.   இதே போல் விற்பனைக்காகவும், விதைக்காகவும் பட்டறையில் பாதுகாத்து வைத்திருந்த சின்ன வெங்காயமும் முளைக்கத் தொடங்கியு...

“இதையெல்லாம் நிச்சயம் செய்யுங்கள்”-பள்ளிகளுக்கு மழைக்கால பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு

Image
பள்ளிகள், மாணவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கொரொனா பொதுமுடக்கத்தால் ஆன்லைனிலேயே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகளுக்கான வகுப்புகள் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது பெய்துவரும் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு நிகழும் அசம்பாவிதங்களை தவிர்த்து அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  அதில், பள்ளிகளில் மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகள், சுற்றுச்சுவர்களை மாணவர்கள் பயன்படுத்தாதவாறு உறுதி செய்ய வேண்டும் முறிந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகள், மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் மின் இணைப்புகள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் திறந்த நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகள், கிணறுகளின் அருகில் மாணவர்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்வதைத் தவிர்க்கும் ...

புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Image
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(19.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(19.11.2021) விடுமுறை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நவ.19ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122492/Leave-announced-for-schools-and-colleges-in-Puducherry-tomorrow.html

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நவ.19ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Image
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(19.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நான்கு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று விடாமல் கனமழை பெய்துவருகிறது. தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் நீர் தேங்கியிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்...

சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Image
சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ மாணவர்கள் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என்ற முறைக்கு பதிலாக , விருப்பம் இருப்பவர்கள் மட்டும் நேரடியாக வந்து எழுதலாம் மற்றவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது , தற்பொழுது தேர்வுகள் நடைபெற்று வருகிறது இந்த நேரத்தில் எப்படி ஆன்லைன் மூலமாக தேர்வுகளை எழுதுவது அனுமதிக்க முடியும் . ஏற்கனவே தேர்வுகள் பட்டியலிடப்பட்டு விட்ட நிலையில் சில மாணவர்களுக்காக அதனை மாற்ற முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினார் . மேலும் கல்வி தொடர்பான விவகாரங்களில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் இதற்காக உள்ள அதிகாரிகள் நிலைமையின் தன்மையை உணர்ந்து பணிபுரிவார்கள் எனவும் நீதிபதிகள் கூறினர். கொரோ...

தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் - அரசாணை வெளியீடு

Image
தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் அளித்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.   தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 1994-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, 1994ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும்; தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக 6 வாரங்களில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் கடந்த மாதம் வழக்குகளை முடித்து வைத்தார்.   இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் அளித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா அரசாணை வெளியிட்டுள்ளார்.   இதையும் படிக்க: 37 தமிழக அ...

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு.. மதுரை காவல்துறை விடுத்த எச்சரிக்கை

Image
மதுரையில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த கோரி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 300 பேர் மீது தல்லாகுளம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டு, தொற்று குறைந்தபிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாகவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் இதனிடையே, ...

நேரடி முறையில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

Image
சட்ட பல்கலைக்கழக தேர்வுகள் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019 முதல் மூன்று பருவத்தேர்வுகளையும் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகம் இணைய வாயிலாகவே நடத்தியது. தற்போது அனைத்து பயிற்சி வகுப்புகளும் நேரடியாக நடத்தப்பட்டு வருவதால், பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடத்தப்படும். இத்தேர்வுகள் டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கி அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப்படிக்க... கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்குப் பதிவு  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122350/Examinations-will-be-conducted-live-only-Tamil-Nadu-Dr-Ambedkar-Law-University.html

37 தமிழக அரசு கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சார்பில் புதிய முதல்வர்கள் நியமனம்

Image
தமிழ்நாடு முழுவதும் 37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி முதல்வர்களாக நியமித்துள்ளது உயர்கல்வித்துறை. அரசு கலை & அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சிக் கல்லூரிகள் என்று 37 பல்வேறு தரப்பட்ட கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேர உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். தொடர்புடைய செய்தி: கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122346/Appointment-of-new-principals-for-37-Tamil-Nadu-Government-Colleges.html

கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை

Image
அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆப்லைன் வழியே மட்டுமே நடைபெறும் என உயர் கல்வித் துறைச் செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.  கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படவேண்டும் என மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இனி செமஸ்டர் தேர்வுகள் ஆஃப்லைன் வழியே மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்துவகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. அழகு நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimura...

புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

Image
புதுக்கோட்டையில் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த செமஸ்டர் முழுவதும் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டதால் தேர்வையும் ஆன்லைன் முறையிலேயே நடத்தவேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று புதுக்கோட்டையிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடி முறையில் செமஸ்டர் தேர்வை நடத்த கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரதம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122258/Students-protest-by-besieging-the-Collector-Office-in-Pudukkottai.html

பொறியியல் மாணவர்களுக்கு டிச. 13 முதல் செமஸ்டர் தேர்வு

Image
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   செமஸ்டர் தேர்வு, இண்டர்னல் தேர்வு, வைவா உள்ளிட்ட அனைத்தும் நேரடியாகவே நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்காக அரியர் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.   வரும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளின் போது அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான தேர்வு மையத்தை வரும் 18-ம் தேதிக்குள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் ஏதேனும் ஒரு மையம் ஒதுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.   இதையும் படிக்க: 'நீட், தேசியக்கல்விக் கொள்கையை ரத்து செய்க!' - இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from ...

சர்வர் பிரச்னை: பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் விரக்தி

Image
கடலூரில் பயிர் காப்பீடு செய்வதற்கு இரவு வரை காத்திருந்த விவசாயிகள் சர்வர் பிரச்னை காரணமாக விரக்தியுடன் திரும்பிச் சென்றனர்.   அண்மையில் பெய்த தொடர் கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாயின. இதனிடையே, நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு நேற்றுவரை தமிழக அரசு அவகாசம் அளித்திருந்தது. இதனால் அரசு இ சேவை மையங்கள், தனியார் கணினி மையங்களில் விவசாயிகள் காத்திருந்து பயிர் காப்பீடு செய்தனர். விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில் இ சேவை மையங்களில் இரவு 10.30 மணி வரை விவசாயிகள் காத்திருந்தனர். எனினும் சர்வர் பிரச்னை ஏற்பட்டதாக மையத்தின் பணியாளர்கள் கூறியதால் காப்பீடு செய்ய முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர். மேலும் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இதையும் படிக்க: “இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்”-பவர் பேங்க் செயலி மோசடி குறித்து சிபிசிஐடி புது அறிவிப்பு   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://pu...

20 ஆண்டுகளாக அரியர் வைத்த மாணவர்களுக்கு 33 தேர்வு மையங்கள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Image
20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுத 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளது. இதுறித்த அறிவிப்பில், “வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டரின் போது தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் வசதிக்கு மாநிலம் முழுவதும் 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு, அதை க்ளியர் செய்ய வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடக்கவுள்ளது.  இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான தேர்வு மையத்தை வரும் 18-ம் தேதிக்குள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த மையத்தையும் தேர்வு செய்யவில்லை என்றால், ஏதேனும் ஒரு மையம் ஒதுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முறையில் மாற்றமில்லை - அண்ணா பல்கலைக்கழகம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122206/Ann...