கேந்திரிய வித்யாலயா பள்ளி சேர்க்கைக்கு ஏப்.1 முதல் ஆன்லைனில் பதிவு துவக்கம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது.
இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம். ஒன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 7 மணி வரை https://ift.tt/2OyDtu2 என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்டு செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம்.
இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும். 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையின்படி https://ift.tt/2EmeBB8 என்ற இணையதளத்தில் 11-ஆம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது நாடு முழுவதும் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/97383/Online-Registration-Process-for-admissions-in-KVs-to-commence-from-April-1.html
Comments
Post a Comment