சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்

வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள பட்டய கணக்காளர் படிப்புக்கான அடிப்படைத் (பவுண்டேஷன்) தேர்வு எழுத, தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கல்விக்கழகம் (ICAI). பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வு எழுதலாம். 

இந்தத் தேர்வு எழுத விரும்புபவர்கள் https://icaiexam.icai.org/ என்ற இணையதள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 20 தொடங்கி மே 4 வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வுக்கான கட்டணத்தை அபராத தொகையுடன் மே 7ஆம் தேதிக்குள் செலுத்தலாம். தேர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி 26, 28 மற்றும் 30 அன்று நிறைவடைகிறது. முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு மதியம் 2 முதல் 5 வரையிலும், மூன்று மற்றும் நான்காம் தாளுக்கான தேர்வு மதியம் 2 முதல் 4 வரையிலும் நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, ஒசூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கரூர், கும்பகோணம், மதுரை, நாகப்பட்டினம், நாகர்கோவில், நாமக்கல், உதகை, புதுக்கோட்டை, சேலம், சிவகாசி, தேனி, திருச்சி, நெல்லை, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. தேர்வுக் கட்டணம் 1500 ரூபாய்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99973/CA-Foundation-Exam-2021-to-be-held-next-June-and-interested-people-can-apply-for-the-examination-through-online-says-Institute-of-Chartered-Accountants-of-India.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா