இந்தியா அவமானத்தில் தலைகுனிகிறது: ஹரியானா விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு ராகுல் கோபம்

ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.
ஹரியானா போராட்டத்தில் காயமடைந்த ஒரு விவசாயியின் படத்தை பகிர்ந்த ராகுல்காந்தி, "மீண்டும் விவசாயிகளின் இரத்தம் சிந்தியது, இந்தியா வெட்கி தலை குனிகிறது" என்று ட்வீட் செய்தார்.
फिर ख़ून बहाया है किसान का,
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2021
शर्म से सर झुकाया हिंदुस्तान का!#FarmersProtest #किसान_विरोधी_भाजपा pic.twitter.com/stVlnVFcgQ
ஹரியானா மாநிலம் கர்னலில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது ஹரியானா காவல்துறையினர் லத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பல விவசாயிகள் காயமடைந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/114125/India-bows-in-shame-Rahul-after-police-lathi-charge-farmers-in-Haryana.html
Comments
Post a Comment