கலைக் கல்லூரிகள் - அக்.4 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ' அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நிறைவு பெற்றுவிட்டது.
அக்டோபர் 4ஆம் தேதி முதல் கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்படுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117440/arts-collages-will-be-open-from-October-4.html
Comments
Post a Comment