Posts

Showing posts from May, 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அரசு தகவல்

Image
தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 -2021 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தில் பள்ளிச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 கோடியாக உள்ளது. 12-ஆம் வகுப்பில் மட்டுமே 10 லட்சம் பேர் உள்ளனர். மற்ற வகுப்புகளில் உள்ள மாணவர்கள் கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாத காரணத்தால் பெற்றோர்கள் அவர்ளுடைய எதிர்காலம் குறித்த பயத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருப்பதால் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின், பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.  மேலும், பள்ளிகள் திறந்தவுடன் இலவச பாடப்புத்தகங்கள், இதர நலத்திட்டங்கள் வழங்குவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார். இந்த கல்வ...

லாக் டவுனால் அதிகரிக்கும் வேலையின்மை பிரச்னை : காரணமும் தீர்வும் - ஓர் விரிவான அலசல்

Image
இந்தியாவில், கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனால் அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கம், பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்ததோடு, வேலையின்மையையும் அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின் கட்டுப்பாடுகளுடன் தொழில்நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்க அனுமதியும் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்த நிலையில், பலர் வேலை இழக்கக் கூடிய சூழ்நிலை உருவானது. 7.11 சதவீதமாக அதிகரித்த வேலையின்மை சதவிகிதம் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் வேலையின்மை சதவிகிதம் 7.11ஆக அதிகரித்துள்ளதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ILOSTAT நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதில், “ தற்போது மீண்டும் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், வேலையின்மை பிரச்னை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வேலையின்மை மே மாதத்தில் இரட்டை இலக்கை எட்ட வாய்ப்புள்ளது. இந்த கொரோனா காலத்தில் சில்லறை வணிகம், உற்பத்தி, போக்குவரத்து, வேளாண், தொழில்நுட்ப துறைகளும், கல்வி நிறுவனங்கள் உட்பட பல ...

கும்பகோணத்தில் விளைந்த 'கிராம அரிசி' ஆப்ரிக்கா, அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி

Image
கும்பகோணத்தில் விளைந்த 4 ஆயிரத்து 5 கிலோ அரிசி ஆப்ரிக்கா மற்றும் அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கிளாசிக்கல் ப்ரீடிங் முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அரிசியில் 15 % புரதம், 14% நார்ச்சத்து இருக்கிறது. இது மற்ற அரிசி வகைகளில் இருப்பதை விட அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். கும்பகோணம், தஞ்சை 'கிராமத்து அரிசி' என்கிற பெயரிலான அரிசியை உதயா வேளாண் பண்ணை என்ற நிறுவனம் விமானம் மற்றும் கப்பல் வழியாக கானா மற்றும் ஏமன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடா, வரும் மாதங்களில் இந்த அரிசியின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உதவிகளை இந்த வேளாண் பண்ணைக்கு அளித்து வருகிறது. இந்த அரிசியில் உள்ள சத்துகள் காரணமாக வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளதாக இந்த வேளாண் பண்ணை நிறுவனத்தினர் கூறுகின்றனர். மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாகவும் அரிசியை மாற்றி விற்பதற்கான நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நஞ்சில்லா உணவு என்ற வகையில் சாகுபடி செய்யப்படும் கிராமத்து அரிசியில் கிளைசமிக் இன்டக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயா...

சிபிஎஸ்இ +2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவெடுக்கப்படும் - மத்திய அரசு

Image
சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் முதலில் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு பிறகு மே மாதம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் கொரோனா 2ஆம் அலை காரணமாக தேர்வு குறித்து முடிவெடுக்காமல் இருந்த நிலையில், ஜூலை மாதம் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளிவந்தது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்த பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, இன்று விடுமுறைகால சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அதில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய அரசு என்ன முடிவெடுத்திருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து கொள்கைரீதியிலான முடிவை 3 நாட்களில் எடுக்கவும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதற்கு மத்திய அரசு, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்தது. எனவே, பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 3ஆம் தேதிக்கு தள்ளிவை;. சிபிஎஸ்இ நிர்வாகம் +2 பொதுத்த...

மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்...இளைஞர்களின் எதிர்காலம் என்ன?

Image
தமிழகத்தில் 88 பொறியியல் கல்லூரிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை இல்லை, இதனால் மூடப்படும் சூழலில் பொறியியல் கல்லூரிகள்..இளைஞர்களின் எதிர்காலம் என்ன என்பது பற்றிய விரிவான அலசல்… இது தொடர்பாக புதிய தலைமுறை நடத்திய சிறப்பு நேர்காணலில் பேசிய கல்வியாளர் ராமசுப்ரமணியன் “ 10 இலட்சம் பேருக்கு 150 பொறியாளர்கள் இருக்கலாம். அதுதான் சீரானது என்று 2003ஆம் ஆண்டும் யூஆர் ராவ் கமிட்டி தெரிவித்தது. ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.   அரசின் விதிகளின்படி கல்லூரிகளை நடத்தும்போது செலவுகளும் அதிகமானது. அதனை பல கல்லூரிகளால் சமாளிக்க முடியவில்லை. சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல முக்கியமான துறைகளே தற்போது மூடப்பட காரணம், கடந்த பல ஆண்டுகளாக கட்டுமானத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான். அதுபோல உற்பத்தி துறையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக மெக்கானிக்கல் படிப்புக்கும் வரவேற்பு இல்லை. மேலும் பல துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்துவதாலும் பொறியாளர்களின் தேவை குறைகிறது. தேவையைவிட பொறியாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால்தான் பொறியாளர்களுக்க...

நீலகிரி: முட்டைகோஸ் விளைச்சல் இருந்தும் விற்க முடியாததால் விவசாயிகள் வேதனை

Image
நீலகிரி மாவட்டத்தில் விளையும் முட்டைகோஸ், அறுவடைகாலம் முடிந்தும் கொரோனா காரணமாக சந்தைபடுத்த முடியாதால் தோட்டத்திலேயே அழுகத் துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு ரூ. 2 கோடிவரை இழப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே பட்டகொரை, ஈளடா, கதகட்டி பகுதிகளில் 60 ஏக்கரில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது. பொதுவாக முட்டைகோஸ் மூன்று மாதத்தில் வெட்டி விற்பனை செய்யப்படுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கால் 4 மாதங்கள் கடந்த நிலையில், முட்டைகோஸ் வெட்டி விற்பனைக்கு எடுத்து செல்ல போதுமான வரவேற்பு இல்லாதால் முட்டைகோஸ் அழுகத் துவங்கியுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் முட்டைக்கோஸை வெட்டி அதே பகுதியில் வீசி வருகின்றனர். இதனால் இரண்டு கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/104621/Nilgiris-Farmers-suffer-due-to-inability-to-sell-cabbage-yields.html

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் சேதம்: வேதனையில் கடலூர் விவசாயிகள்

Image
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் திடீர் கோடை மழையால் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள தொளார், புத்தேரி, மருதத்தூர், மேலூர், எரப்பாவூர், ஆதமங்கலம், சாத்தநத்தம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெலிங்டன் பாசன நீரைக்கொண்டு நெல் பயிரிட்டனர். நெற்பயிர்கள் நன்றாக விளைந்து சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடை மழையில் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால், நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தற்போது முற்றிலுமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் வாங்கிய கடனை எவ்வாறு திருப்பி செலுத்துவது என விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். வேளாண் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/104594/Paddy-crops-ready-for-harvest-damaged-by-rains-Cuddalore-farmers-in-agony.html

'சுவையும் மிகுதி' - அதிக குளிர் அவசியமில்லா ஆப்பிள் வகையை உருவாக்கிய இமாச்சல் விவசாயி

Image
மலர்வதற்கும், கனியாவதற்கும் அதிக குளிர்ந்த நேரங்கள் தேவைப்படாத வகையில் சுய மகரந்தச் சேர்க்கையில் வளரும் புதுமையான ஆப்பிள் வகையை இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தகவல்  வெளியிட்டுள்ளது. 'கோடைக்காலத்தில் 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆப்பிள் விளைகிறது. மணிப்பூர், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வணிக ரீதியாக இந்த ஆப்பிள் வகையைப் பயிரிடும் பணி தொடங்கப்பட்டுள்ளதோடு, புதுச்சேரி உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனியாகும் தருவாயில் உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பனியாலா கிராமத்தைச் சேர்ந்த முற்போக்கு விவசாயியான ஹரிமன் ஷர்மா, 'ஹெச்ஆர்எம்என் 99' என்ற புதிய ஆப்பிள் வகையை உருவாக்கி, இதர விவசாயிகளுக்கு ஊக்கமளித்துள்ளார். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் தேசிய புதுமை அமைப்பு இந்த புதிய...

குறுவை சாகுபடிக்கான பணியில் முழுவீச்சில் தஞ்சை விவசாயிகள்

Image
மேட்டூர் அணை இந்த ஆண்டு ஜூன் 12 திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். தஞ்சையை அடுத்த களிமேடு பகுதியில் குறுவை சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு முப்போக சாகுபடி நடைபெற்ற நிலையிலும் அறுவடை நேரத்தில் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது மேட்டூர் அணையில் 97 அடி தண்ணீர் உள்ள நிலையில், இந்த ஆண்டு கர்நாடகாவில் பருவ மழையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து ஜூன் 12 மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறப்பதற்குள் வயல்வெளிகளை தயார் செய்யக்கூடிய பணியும் முற்பட்ட குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையை அடுத்த களிமேடு பகுதியில் 400 ஏக்கருக்கு தேவையா...

பழைய முறையிலேயே மறுதேர்வு வினாத்தாள் இருக்கும் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Image
முந்தைய எழுத்துத் தேர்வுகளின்போது பின்பற்றப்பட்ட வடிவில்தான் மறுதேர்வு வினாத்தாள் அமைப்பும் இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், செமஸ்டர் தேர்வுக்கு ஜுன் 7க்குள் விண்ணப்பிக்க வேண்டுமெனவும் அதேபோல ஜுன் 12ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், முந்தைய எழுத்துத் தேர்வுகளின்போது பின்பற்றப்பட்ட வடிவில்தான் மறுதேர்வு வினாத்தாள் அமைப்பும் இருக்கும் என்றும், நடப்பு செமஸ்டருக்கான வினாத்தாள் வடிவமைப்பும் பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையில் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/104387/The-old-fashioned-re-selection-question-paper-will-be-Anna-University-announcement.html

தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி... சாதக, பாதகங்கள் என்ன? - ஓர் அலசல்

Image
வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் உட்பட ஏழு பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி பாடத்திட்டம் அமைய உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதியை பெற கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே கல்வியை தாய் மொழியில் கற்பது சிறப்பான புரிதலை கொடுக்கும் என வல்லுனர்கள் பலர் சொல்வதுண்டு. அந்தவகையில் பொறியியல் கல்வி இளநிலை பாடத்திட்டத்தை இனி மாணவர்கள் தமிழில் கற்கலாம்.  முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், குஜாராத்தி மற்றும் மராத்தி ஆகிய ஏழு பிராந்திய மொழிகளில் இளநிலை பொறியியல் கல்விக்கான பாடத்திட்டங்கள் தயாராக உள்ளதாக AICTE தெரிவித்துள்ளது. இது தவிர மேலும் 11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. பிராந்திய மொழிகளில் பாடம் கற்கவும், கற்பிக்கவும் கட்டாயம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் தொழிற்கல்வி குறித்த தெளிவான புரிதலை பெற இந்த முயற்சி பெரிதும் கைகொடுக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்....

மதிய உணவு திட்ட நிதியை பணப்பரிவர்த்தனை மூலம் மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு

Image
மதிய உணவு திட்டத்திற்கான நிதியுதவியை நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் மாணவர்களுக்கு வழங்க உள்ளது மத்திய அரசு. இதன்மூலம் சுமார் 11.8 கோடி மாணவர்கள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 11.8 கோடி மாணவர்களுக்கு நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சர்ரமேஷ் பொக்ரியால் ஒப்புதல் அளித்துள்ளார். தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த சிறப்பு நலநிதி வழங்கப்படவுள்ளது. இது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் (PM-GKAY) கீழ் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதின் கூடுதல் நடவடிக்கையாகும். இந்த முடிவு குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவைப் பாதுகாக்கவும், சவாலான தொற்றுநோய்களின்போது அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதுகாக்கவும் உதவும். இதற்காக மத்திய அரசு சுமார் 1200 கோடி ரூபாய் கூடுதல் நிதியை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கும். மத்திய அரசின் இந்த ஒரு முறை சிறப்பு நல நடவடிக்கை, நாடு முழுவதும...

முழு ஊரடங்கு காலத்திலும் திறக்கப்பட்ட பூச்சி மருந்து கடைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

Image
முழு ஊரடங்கு காலத்திலும் உரம் மற்றும் பயிர்களுக்கான பூச்சி மருந்துக் கடைகள் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முழு ஊரடங்கால் கடந்த சில தினங்களாக உரக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் குறுவை சாகுபடி செய்யத் தொடங்கிய விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்து கிடைக்காததால் அவதியடைந்தனர். இதையடுத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி காலை ஆறு மணி முதல், பத்து மணி வரை உரம் மற்றும் பூச்சி மருந்துகளை விற்பனை செய்ய அரசு அனுமதித்துள்ளது. அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 317 உரக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/104237/Fertilizers-shop-opened-in-Tamil-Nadu-at-lockdown-days.html

“கேள்வியையும் அதற்கான பதிலையும் நீங்களே எழுதுங்கள்” - மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கோவா ஐஐடி

Image
வழக்கமாக தேர்வு என்றால் ஆசிரியர்கள் தயாரித்து கொடுக்கின்ற கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிப்பார்கள். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மாணவர்களையே தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்து, அதற்கான பதிலையும் எழுதிய சொல்லி உள்ளனர் கோவா ஐஐடி உயர்கல்வி கூட பேராசிரியர்கள்.  ANALOG CIRCUITS என்ற பாடத்திற்கான செமஸ்டர் தேர்வு வினத்தாளைதான் தயாரித்து, பதில் எழுத சொல்லி உள்ளனர் பேராசிரியர்கள். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளது இரண்டு விஷயங்கள் தான். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் வகையில் இந்த செமஸ்டர் முழுவதும் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்டடி மெட்டீரியல்ஸை கொண்டு தயார் செய்து கொள்ளுங்கள். அதற்கான பதிலை இரண்டு மணி நேரங்களில் கொடுங்கள். இந்த பாடம் குறித்த புரிதல் உங்களுக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதை நீங்கள் வடிவமைக்கும் கேள்வித்தாள் வெளிப்படுத்தி விடும். உங்கள் நண்பர்களுடன் கலந்தாலோசித்து வினாத்தாளை நீங்கள் தயாரித்தால் அது உங்களது மதிப்பெண்ணை குறைக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.  இரண்டாவதாக சொல்ல உள்ள விஷயம் நீங்கள் தயாரித்த கேள்விக்கு பதில் அளியுங்கள் என சொல்லப்பட்டுள்ளத...

தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் கல்விக்கு அனுமதி

Image
தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் கல்வி வழங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. வரும் ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டு முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் பொறியியல் கல்வி பாடத்திட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மிகுந்த பலன் தருவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் கற்பதன் மூலம் பொறியியலின் அடிப்படை அம்சங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும் என ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்தார். தற்போது 7 மொழிகளில் பாடங்கள் இருக்கும் நிலையில் அடுத்து இது மேலும் 11 மொழிகளில் வழங்கப்படும் என்றும் அனில் சஹஸ்ரபுத்தே கூறியுள்ளார். ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடங்களை மொழி பெயர்க்க மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyatha...

6 மாதங்களை நிறைவு செய்தது விவசாயிகள் போராட்டம்: கருப்பு தினமாக அனுசரித்த தமிழக விவசாயிகள்

Image
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 6 மாதம் நிறைவடைந்ததையடுத்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்பு தினம் அனுசரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல் டெல்லை எல்லையை முற்றுகையிட்டு உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாபில் இருந்து டெல்லி செல்லும் சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ரயில் மறியல், ட்ராக்டர் பேரணி, செங்கோட்டை முற்றுகை என பலக்கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் வீடுகளில் கருப்புகொடி ஏற்றினர். அதேபோல் டெல்லி செல்லும் டிக்ரி, காஸியாபாத், சிங்கு உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். காஸியாபாத் எல்லையில் விவசாயிகள் திடீரென உருவப்பொம்மை எரித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வி...

மழையில் நனைந்து முளைக்கத் துவங்கிய நெல்மணிகள்: கவலையில் விவசாயிகள்

Image
விழுப்புரம் அருகே இரண்டு நாட்களாக பெய்த மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கானை குப்பம் கிராமத்தில் இயங்கிவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை வியாபாரிகள் எடுத்துச் செல்லாததால், அடுத்தடுத்து விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் அங்கேயே தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவை கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் நனைந்து மூட்டைகளில் இருக்கும் நெல்மணிகள் முளைக்கத் துவங்கிவிட்டன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/104025/Rice-seeds-soaked-in-the-rain-and-beginning-to-germinate-Anxious-farmers.html

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் கிடைக்காததால் விவசாயப் பணிகள் பாதிப்பு!

Image
கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன்கள் வழங்கப்படாததால், சாகுபடி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் தொழில்கள் முடங்கிக் கிடந்த போதிலும், விவசாயத்துறை மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்குக் கை கொடுத்து வருகிறது. கொரோனா பரவல் அச்சத்திலும், ஊருக்கே உணவளிப்பதற்காக, விளை நிலத்தில் இறங்கி தங்களது அன்றாடப் பணிகளை செய்து வரும் விவசாயிகள் தற்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 160 கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ள நிலையில், புதிதாக பயிர்க்கடனை வழங்க மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் பயிர்கடன்களை தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்ட பின்னர், கூட்டுறவு கடன் சங்கத்தில், புதிதாக கடன் தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தற்போது விவசாயப் பணிகளை செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/104019/Agricultural-work-affected-due-to-non-availability-of-crop-loans-.html

உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? - பிஎஸ்பிபி பள்ளி முதல்வரிடம் 2ஆவது முறையாக விசாரணை

Image
ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் தொடர்பாக, பிஎஸ்பிபி பள்ளியின் முதல்வரிடம் 2ஆவது முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி (பிஎஸ்பிபி) ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டதால், தாளாளர் ஷீலா ராஜேந்திரா, முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோர் நேற்று நேரில் ஆஜராகினர். அவர்களிடம் 3 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முதல்வர் கீதா கோவிந்தராஜன் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கீதா கோவிந்தராஜன் 2ஆவது முறையாக ஆஜரானர். புகார் கிடைத்ததும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthi...

6 மாதங்களை எட்டியிருக்கும் விவசாயிகளின் போராட்ட கோரிக்கை நிறைவேற வேண்டும்: கமல்

Image
6 மாதங்களை எட்டியிருக்கும் விவசாயிகள் போராட்டம் வெற்றியடையவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். <blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும்.</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1397461787985944578?ref_src=twsrc%5Etfw">May 26, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> இது தொடர்பாக கமல் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்ற...

தமிழகத்தில் 'நீட்' நீடிக்குமா, ரத்தாகுமா? - ஒரு விரைவுப் பார்வை

Image
தமிழ்நாட்டில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை என்ற அரசின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அப்படியானால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா எனும் கேள்வி எழுகிறது. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவிக்க, அதனை உறுதி செய்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நீட் தேர்வு தொடர்பான அமைச்சர்களின் கருத்துகளை, அரசியல் பேச்சாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, தமிழக அரசு சட்டம் இயற்றுவதால் எந்த பயனும் இல்லை என வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் நீட் நுழைவு தேர்வு தொடர்பாக தமிழகம் சட்டம் இயற்ற வாய்ப்பே இல்லை என்கிறார் வழக்கறிஞர் தமிழ்மணி. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசே நடத்தலாம் என்ற வாதத்தை முன் வைக்கும்பட்சத்தில், மத்திய அரசின் நீட...