Posts

Showing posts from October, 2021

தூத்துக்குடி: பள்ளியின் வசதிகளை மேம்படுத்த கல்விச்சீர் கொடுத்து மகிழ்ந்த கிராம மக்கள்

Image
தூத்துக்குடி அருகே பள்ளிகள் திறப்பைக் கொண்டாட்டமாக மாற்றியுள்ள ஒரு கிராம மக்கள், உடன் பள்ளிக்கூடத்துக்குத் தேவையான பொருள்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கல்விச்சீராகக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் தணிந்து ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு, ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. இதையொட்டி தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர் சார்பில், ‘கல்விச்சீர்’ வழங்கும் விழா நடைபெற்றது. இதையும் படிங்க: நவ.1 முதல் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு அந்த ‘கல்விச்சீர்’ விழாவில், ரூ.50,000 மதிப்பில் பள்ளிக்குத் தேவையான பொருள்களை பெற்றோர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு நேரடியாக கொண்டு சென்றனர். அவர்களுடன் சீருடையுடன் வந்த மாணாக்கர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றார். ஒன்றரை ஆண்டாக ஆன்லைனில் பயின்ற மாணாக்கர்கள், ஆசிரியர்களையும் சக மாணாக்கர்களையும் நேரில் பார்த்து மகிழ்ந்தனர். ...

19 மாதங்களுக்குப் பிறகு வகுப்பறைக் கற்றலில் மாணவர்கள்; வரவேற்க தயாரான பள்ளிக்கூடங்கள்

Image
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கிட்டதட்ட 19 மாதங்களுக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களை இனிப்பு தந்து வரவேற்க ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதுமுள்ள 32,000 பள்ளிகளில் பயிலும் 34 லட்சம் மாணவர்கள் மீண்டும் வகுப்பறைக் கற்றலுக்கு திரும்ப தயாராகியுள்ளனர். கடந்த மாதங்களில் வீடுகளுக்குள்ளாக முடங்கியிருந்ததாலும், ஆன்லைன் கற்றல் காரணமாகவும் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பர் என்ற அடிப்படையில் மாணவர்களின் மனதை மகிழ்விக்க கதை, விளையாட்டு, பாடல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்டவற்றை முன்னெடுக்குமாறு அறிவித்தியுள்ளது பள்ளிக்கல்வித்துறை. மட்டுமன்றி பள்ளிக்கு வரும் மாணவர்களை மாநிலம் முழுவதும் உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் வரவேற்க உள்ளனர். தொடர்புடைய செய்தி: 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் அறிவிப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சுழற்சி முறையில் வகுப்புகள், வகுப்பறையில் ஒரு நேரத்தில் 20...

இல்லம் தேடி கல்வி பணி: ரூ1000 சம்பளத்திற்கு 450முனைவர்கள், 1 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பம்

Image
இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான தன்னார்வலர் பணிக்கு, 450 முனைவர்கள் உட்பட மொத்தம் ஒரு லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இந்த நிலையில், தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இத்திட்டத்தின்கீழ், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி: இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் இந்த திட்டத்துக்காக இல்லம் தேடி கல்வி வழங்க 2 லட்சம் தன்னார்வலர்களை எதிர்பார்ப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அவர்களுக்கு மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்ப...

1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் அறிவிப்பு

Image
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் 1-ம் தேதிமுதல் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. அதன்படி, பள்ளிக்கு வரும் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளாக கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறது. 15 நாட்களுக்குப் பின் அடுத்த 40 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கிட வேண்டும் எனவும், மாணவர்கள் கற்றல் அடைவுத்திறனை எட்டும் வரை புத்தாக்கப்பயிற்சி தொடரப்பட வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். பொது சொத்து சேதப்படுத்திய வழக்கு: தா.மோ அன்பரசன், மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு ரத்து  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/120747/School-edu...

இந்திய வனப் பணி: தேர்வெழுதிய முதல் முறையிலேயே தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி

Image
பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் கீரனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் . இவரது மனைவி சந்திரா மணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் திவ்யா, இந்திய வனப் பணி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் பத்தாம் இடம் பிடித்துள்ளார் திவ்யா. திவ்யா கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வனப் பணி தேர்வுக்கு தயாராகிவந்த நிலையில், தனது முதல் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யா, அடிப்படையில் பி.இ. எலக்ட்ரானிக்கல் எலக்ட்ரிக் இஞ்சினியரிங் (இ.சி.இ) பட்டதாரி. தனது பட்டப்படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகதத்தில் படித்து உள்ளார் அவர். தனது இந்திய வனப் பணி தேர்வின் வெற்றி குறித்து நம்மிடையே பேசிய திவ்யா, “நான் இந்த யு.பி.எஸ்.சி  தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களுமே காரணம். அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பணிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றுவேன். எத...

திருவாரூர்: உரம் விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு - 12 கடைகளுக்கு ஒரு வாரம் தடை

Image
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உரம் விற்பனை செய்யும் கடைகளில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உரக் கடைகளில் ஆவணங்களில் உள்ள இருப்பும் கடைகளில் உள்ள இருப்பையும் சரிப்பார்ப்பதற்காகவும் , கடைகளில் விலைப்பட்டியல் சரியான முறையில் விவசாயிகளுக்குத் தெரியும் வண்ணம் எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறியவும், வேறு ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பதை கண்டுபிடிக்கவும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உரக் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சரியாக பதிவேடுகளை பராமரிக்காத 12 கடைகளுக்கு ஒரு வாரம் உரம் விற்பனை செய்ய தடை விதித்தது திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை . இதனைப்படிக்க... “அதிமுகவில் ஆதரவான அலை..?” - சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணத்தால் என்ன நடக்கும்?-ஓர் அலசல்  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/120689/Thiruvarur-Agriculture-officials-inspect-fertilizer-shops.html

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Image
கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளத. இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் வரும் ஜனவரி 7, 2022 முதல் நடைபெற உள்ள முதன்மை தேர்வில் கலந்து கொள்ளலாம். குடிமை பணிகளுக்கான தேர்வுகள் மொத்தம் மூன்று கடிதங்கள், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெர்சனாலிட்டி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் பணியில் சேரலாம்.   இதையும் படிக்கலாம் :  டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/120686/Civil-Services-Examination-Preliminary-Exam-Results-out-UPSC-and-check-it-in-official-website.html

சுற்றறிக்கையால் பணிமாறுதல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் - நடந்தது என்ன?

Image
"புதிய கல்விக் கொள்கையை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்” என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய அரசு சார்பில் பள்ளி கல்வித் துறைக்கு கடந்த 18ம் தேதி கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பாக இமெயிலில் ஒரு தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. அதற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என நினைத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் அதை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வராமல், பதில் அனுப்பியுள்ளார் அவர். மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவரேவும் சர்க்குலர் அனுப்பியிருந்துள்ளார். இப்படி பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர் தொடர்ந்த கவனக்குறைவாக செயல்பட்டதால் அவரை தற்போது பணிமாறுதல் செய்துள்ளோம். இதையும் படிங்க... இல்லம் தேடி கல்வித் திட்டத்தை எதிர்க்கும் கூட்டணிக்கட்சிகள்: கல்வியாளர்களின் கருத்து என்ன? மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றோம். அப்படியிருக்கையில்...

”மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை” - என்ன சொல்கிறது பள்ளிக்கல்வித்துறை?

Image
ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் வரும் 1ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில்  பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலையிலிருந்து மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். தினமும் ஏற்கெனவே அறிவித்தபடி சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். அதாவது, திங்கள் கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் கிழமை அவர்களுக்கு விடுமுறை. மீண்டும் புதன்கிழமை அவர்கள் வரவேண்டும். எந்த வகுப்பினரை  எந்த நாட்களில் வர வைக்க வேண்டும் என்பதை அந்த அந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம். ஏனென்றால் ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில் வெவ்வேறு எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பார்கள். எனவே அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அந்த அந்த பள்ளி மாணவர்களை திங்கள்கிழமை வரவைக்க வேண்டுமா? அல்லது செவ்வாய்க்கிழமை வரவழைக்க வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். இதுபோன்று ஒரு வகுப்பிற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும். சென்னையில் எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி? - காவல் ஆணையர் விளக்கம்...

''11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டே அட்மிஷன்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Image
தமிழகத்தில் தொடங்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில், 4 கல்லூரிகளில் கூடுதலாக 600 மாணவர்கள் சேர்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   டெல்லியில் நடந்த அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக 800 மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசின் தொடர் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம், கூடுதலாக 600 மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   இதையடுத்து நடப்பாண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமாக 1...

பெண் தேர்வரின் மேலாடையை ஆண் பாதுகாவலர் கத்தரித்த விவகாரம் - கண்டித்த தேசிய மகளிர் ஆணையம்!

Image
ராஜஸ்தான் மாநிலத்தில் அம்மாநில குடியியல் பணிக்கான முதற்கட்ட தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்வு எழுதுபவர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் இருக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் இணைய இணைப்பும் நிறுத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், இந்த தேர்வை எழுத வந்த பெண் தேர்வர் ஒருவரின் மேலாடையை ஆண் பாதுகாவலர் கத்தரித்த விவகாரம் சர்ச்சையை எழுப்பி உள்ளது. பிகானேர் மாவட்டத்தில் அமைந்திருந்த தேர்வு மையம் ஒன்றில் இது நடந்துள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்துள்ளது தேசிய மகளிர் ஆணையம்.  National Commission for Women (NCW) takes cognisance of the incident where a male security guard was reportedly seen cutting the sleeves of a top worn by a female candidate outside an exam centre for RAS 2021 in Bikaner district, Rajasthan. pic.twitter.com/JVjfXRDQXf — ANI (@ANI) October 28, 2021 “பெண்கள் இதுமாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளானதை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, இதுகுறித்து ராஜஸ்தான் மாநில தலைம...

”மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர் குழு அமைக்கப்படும்” மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Image
மாநில அளவிலான கல்விக் கொள்கையை வகுத்திட கல்வியாளர் குழு அமைக்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்திருக்கும் முதல்வர், “இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற 86,550 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிலிருந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவர். அப்படி தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உரிய பயிற்சியளிக்க தன்னார்வலர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும்” என தெரிவித்தார். தொடர்புடைய செய்தி: இல்லம் தேடி கல்வித் திட்டத்தை எதிர்க்கும் கூட்டணிக்கட்சிகள்: கல்வியாளர்களின் கருத்து என்ன? Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/120566/MK-Stalin-s-announces-his-planning-of-academic-committee-that-will-be-formed-to-formulate-state-education-policy.html

இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் இதரபிரிவு மாணவர்களை நிரப்பலாம்: உயர்க் கல்வித்துறை

Image
வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால், அதை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று உயர்க் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.  உயர்கல்வித்துறையின் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில்   வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால், அதை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்றோர் பிரிவினரைக் கொண்டு சுழற்சி முறையில் நிரப்பிட அனுமதி வழங்கியிருக்கிறது.  வடகிழக்கு பருவமழை: பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை  தென்மாவட்டங்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் இடங்கள் பெரும்பாலானவை காலியாக இருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள், சீர் மரபினரைக் கொண்டு அந்த இடங்களை நிரப்புவதற்கான இந்த உத்தரவை உயர்க் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட ...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி

Image
அக்டோபர் 28 முதல் 31ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர்களுக்கான தேர்வு, 129 மையங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வரும் அக்.28 - 31 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வர்கள் அருகில் உள்ள மையங்களிலேயே தேர்வை எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததால் தேர்வு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தேர்வர்கள் அருகிலுள்ள தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதுவது குறித்து புதிய அரசாணை வெளியிடப்படும்" என தெரிவித்த அமைச்சர், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை ஒத்திவைக்கப்படுவதோடு, இதற்கான பணிகள் மேற்கொள்ள கால அவகாசம் தேவை என்பதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்தார். So...

முதுநிலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நிறுத்தம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

Image
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தவேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயித்ததற்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதனால் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி நீதிமன்றம் முடிவு செய்தபிறகே கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. வடக்கு கலிஃபோர்னியாவில் கொட்டித் தீர்த்த கனமழை - சாலைகளில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/120190/Supreme-court-ordered-union-government-to-stop-NEET-post-graduation-counselling.html

முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி - தேனி மாவட்ட விவசாயிகள் கவலை

Image
போதிய விளைச்சல் இருந்தும், தண்டு அழுகல் நோய் காரணமாக முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, தேனி மாவட்ட விவசாயிகளை கவலை அடையச்செய்துள்ளது. போடி சுற்றுப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் முட்டை கோஸ் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 80 கிலோ முட்டைகோஸ் கொண்ட ஒரு மூட்டை, ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை போனதாகவும், தற்பொழுது 600 ரூபாய்க்கு விற்பதே சிரமமாக இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, தங்கள் வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனைப்படிக்க... பாஜக மீது கைவைத்தால் திமுகவிற்கு வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் - அண்ணாமலை  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/120114/Falling-cabbage-prices---Theni-district-farmers-worried.html

”ஐஐடி சீட் கிடைக்கும்; ஆனால் கல்லூரி சேர பணமில்லை” திருச்சி அரசுப் பள்ளி மாணவர் வேதனை

Image
ஜெ.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவனொருவர், ஐஐடி கலந்தாய்வுக்கு பிறகு கல்வி கட்டணம் கட்ட முடியாதென நினைத்து அரசு உதவியை கோரி நிற்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐஐடி பற்றிக் கேள்விப்படாத திருச்சி துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவன் அருண் குமார், தனது ஊரிலிருந்து 3 கி.மீ தூரம் தொலைவிலிருந்த சேவல்பட்டி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றிருந்தார். அப்போது திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த மாணவர்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் கல்வி பயில முறையான பயிற்சி தேவை அந்த பயிற்சிகளை நாங்கள் தருகிறோம் என்று நேரடியாக வந்து மாணவர்களிடம் பேசினர். இதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் தனியாக சிறப்பு பயிற்சிகள் நடத்த ஏற்பாடு செய்து தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 16 மாதங்களுக்கு மேலாக கோவிட் பெருந்தொற்று காலத்தினால் மாணவர்கள் நேரடியாக வரமுடியாத நிலை இருந்துவந்தது. அதையும் சமாளிக்க, ஆட்சியர் இணையதள...

அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை - தமிழக அரசு தகவல்

Image
அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் உயர்நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள். பின்னர் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும், அந்த தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிமன்றம் 8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த...

“போராடுவதற்கான உரிமை விவசாயிகளுக்கு உண்டு! அதற்காக சாலையை மறிப்பதா?”- உச்சநீதிமன்றம்

Image
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், தலைநகர் டெல்லி எல்லையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஓராண்டு காலத்தை இந்த போராட்டம் நெருங்கியுள்ளது. இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த மோனிக்கா அகர்வால் “தினசரி போக்குவரத்துக்கு இடையூறு கொடுக்கும் விதமாக டெல்லியின் எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது. ஆகையால் சாலையை மறித்து போராடி வருபவர்களை அப்புறப்படுத்த வேண்டும்” என நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.  அவரது மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, “இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு காண வேண்டியுள்ளது. போராடுவது விவசாயிகளின் உரிமை. அதை நாங்கள் கூடாது என சொல்லவில்லை. ஆனால் அதற்காக சாலையை மறிக்கக்கூடாது. மக்களுக்கு சாலையில் செல்வதற்கான உரிமை உள்ளது. அதனால் தான் இது கூடாது என்கிறோம்.  விவசாயிகளின் பிரச்னையை தீர்ப்பது நீதிமன்றமோ, போராட்டமோ அல்லது நாடாளுமன்ற விவாதமாக கூட இருக்கலாம். ஆனால் தேசிய நெடுஞ்சாலையை மறிப்பது தொடர்கதையாகி உள்ளது. இதற்கு முடிவே கிடையாதா?” என இதனை தெரிவித்துள்ளனர்....