“பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும்”: ஐஐடி பேராசிரியர்கள், மருத்துவர்கள்,பெற்றோர்கள் கடிதம்
பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரி மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடக மாநில முதல்வர்களுக்கு , பல ஐஐடி பேராசிரியர்கள் , மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர். ஐஐடி பாம்பேவின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் பாஸ்கரன் ராமன் , மகாராஷ்டிரா , டெல்லி மற்றும் கர்நாடக முதல்வர்க ள், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஒரு பணிக்குழுவை அமைக்குமாறு வலியுறுத்தினார் . இந்த கடிதத்தை ஐஐடி பா ம் பே , ஐஐடி டெல்லி பேராசிரியர்கள், பல்வேறு மருத்துவர்கள் , தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் மகாராஷ்டிரா , டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர்க ளும் இணைந்து எழுதியுள்ளனர். இ ந்த கடிதத்தில் , “ கடந்த 16 மாதங்களாக பள்ளிகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. இதனால் கற்றல் மற்றும் வளர்ச்சி இழப்புக ள் அதிகரித்து வருகின்றன , அதே நேரத்தில் அறிவியல் ஆதாரங்கள் மற்றும் பாதுகாப்புகளுடன் மீண்டும் பள்ளிகளை திறப்பத ற்கான சாத்தியம் குறித்த அறிக்கையை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளோம். கொரோனா ' ஜீரோ கேஸ் ' என்பது சாத்தியமில்லை , ஆனா...