Posts

Showing posts from April, 2021

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்! - சோனு சூட்

Image
’கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கவேண்டும்’ என்று மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் சோனு சூட். கொரோனா காலத்தில் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது கரங்களை நீட்டி வருகிறார். ஏற்கனவே, கொரோனா பரவலின் இரண்டாவது அலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை என அனைத்து வயதுடையவர்களும் பாதிக்கப்படுவதால் ‘பொதுத்தேர்வுகளை ரத்து செய்யவேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். पूरे देश को मिल के इस मुहिम में जुड़ना है। @EduMinOfIndia pic.twitter.com/ei9QJYtDcF — sonu sood (@SonuSood) April 29, 2021 இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்...

ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐஐடி பாம்பே மேற்கொண்டுள்ள புதிய முயற்சி!

Image
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் தலைவிரித்து ஆடி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ தேவைப்படும் ஆக்சிஜனை எதிர்நோக்கி உள்ள நிலையில் தேசத்தில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஐஐடி பாம்பே அதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது.  அதன்படி மிக எளிதான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நைட்ரஜன் ஜெனெரேட்டர்களை ஆக்சிஜன் ஜெனெரேட்டர்களாக மாற்றுவது தான் அவர்கள் முன்னெடுத்து வந்துள்ள முயற்சி. அதனை நிரூபித்தும் அவர்கள் காட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த முறையை பயன்படுத்தி தேசம் முழுவதும் உள்ள நைட்ரஜன் பிளான்டுகளை மருத்துவ ஆக்சிஜனாக மாற்றலாம் என ஆராய்ச்சி துறையை சார்ந்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.  டாட்டா கன்செல்டிங் மற்றும் ஸ்பான்டெக் பொறியாளர்கள் உதவியுடன் இதனை சாத்தியப்படுத்தி உள்ளது ஐஐடி பாம்பே.  देशातील ऑक्सिजन टंचाई संकटाच्या पार्श्वभूमीवर @iitbombay तील तज्ञांनी नायट्रोजन निर्मिती सयंत्राचे ऑक्सिजन निर्मिती संयंत्रात रूपांतर करून ऑक्सिजन टंचाईवर मात करण्याचा दाखवला मार्ग ऑक्सिजन उपलब्धतेच्या समस्येवर साधा आणि त्वरित उपाय ? https://t....

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்

Image
’மே 1 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை’ என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், ப்ளஸ் டூ பொதுத்தேர்வு தேதி அறிவிக்கும்வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே வழிகாட்டுதலை வழங்கவேண்டும். மற்ற வகுப்பு மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/100657/Teachers-are-not-required-to-come-to-school-from-May-1---Director-of-School-Education.html

நாமக்கல்: ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நேரமும் செலவும் குறைவதாக விவசாயிகள் கருத்து

Image
நாமக்கல் அருகே ட்ரோனை பயன்படுத்தி மரவள்ளி பயிருக்கு மருந்து தெளிக்கும் விவசாயிகள், நவீன தொழில்நுட்பம் நேரத்தையும், மருந்து செலவையும் குறைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர், வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி, பருத்தி, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மோகனூர், ஒருவந்தூர், சங்கரம்பாளையம் செல்லியம்பாளையம், வடுகப்பட்டி, உன்னியூர், கிடாரம், ஒருவந்தூர் புதூர், கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண்டு தோறும் மரவள்ளி, பருத்தி, வாழை பயிரிடும் போது பூச்சிகள் அதிகம் தாக்கி வந்த நிலையில், பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்து வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் விவசாயிகள் நவீன ட்ரோன் பயன்படுத்தி மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நேரம் பாதி அளவாக குறைவதோடு மருந்து செலவும் வெகுவாக குறைவதாகவும் அதாவது ஒரு ஏக்கருக்கு தெளிக்கும் மருந்தை 2 ஏக்கருக்கு தெளிப்பதாகவும் விவசாயிகள் த...

'விஷன் 2030'-ன் அடுத்த திட்டம்... ராமாயணம், மகாபாரதம் படிக்கப்போகும் சவுதி மாணவர்கள்!

Image
சவுதி அரேபியாவில் மாணவர்களுக்கு இந்தியாவின் புராணங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவை கற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'விஷன் 2030' என்ற திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார் அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். இந்தத் திட்டத்தின் கீழ் புதிய முயற்சியாக, வெவ்வேறு கலாசாரங்களைப் பற்றிய கூடுதல் அறிவை வளர்த்தும் கொள்ளும்படி, பிற நாடுகளின் வரலாறு மற்றும் கலாசாரங்கள் பற்றிய பாடங்களை சவுதி மாணவர்கள் படிக்கவைக்க முடிவெடுத்து, அதற்காக ஆய்வு நடத்த சல்மான் முடிவெடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு இந்தியாவின் புராணங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாணவர்களின் கலாசார அறிவு மற்றும் வெளிப்பாட்டை விரிவுபடுத்துவதற்காக, உலகளவில் குறிப்பிடத்தக்க இந்திய கலாசாரங்களான யோகா மற்றும் ஆயுர்வேதம் குறித்து இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமாயணம் மற்றும் மகாபாரதம் போல் புதிய 'விஷன் 2030'-ல் ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவுதி அரசு ...

புதுச்சேரி பல்கலை கழகத்திற்கு 4 நாட்கள் விடுமுறை

Image
புதுச்சேரி பல்ககலைக்கழகத்திற்கு நாளை முதல் 27ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25க்குள் விடுதிகளை காலி செய்ய வேண்டும் என பி.எச்டி மாணவர்களுக்கு புதுச்சேரி மத்திய பல்கலை கழகம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக உணவு விடுதியும் இயங்காது என பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/100100/4-days-leave-for-puducherry-university-due-to-corona-spread.html

சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்

Image
வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள பட்டய கணக்காளர் படிப்புக்கான அடிப்படைத் (பவுண்டேஷன்) தேர்வு எழுத, தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கல்விக்கழகம் (ICAI). பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வு எழுதலாம்.  இந்தத் தேர்வு எழுத விரும்புபவர்கள் https://icaiexam.icai.org/ என்ற இணையதள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 20 தொடங்கி மே 4 வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வுக்கான கட்டணத்தை அபராத தொகையுடன் மே 7ஆம் தேதிக்குள் செலுத்தலாம். தேர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி 26, 28 மற்றும் 30 அன்று நிறைவடைகிறது. முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு மதியம் 2 முதல் 5 வரையிலும், மூன்று மற்றும் நான்காம் தாளுக்கான தேர்வு மதியம் 2 முதல் 4 வரையிலும் நடைபெற உள்ளது.  தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, ஒசூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கரூர், கும்பகோணம், மதுரை, நாகப்பட்டினம், நாகர்கோவில், நாமக்கல், உதகை, புதுக்கோட்டை, சேலம், சிவகாசி, தேனி, திருச்சி, நெல்லை...

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு?

Image
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடத்தப்படாமல், பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.எனவே அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்தந்த பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் இந்த தேர்வு கட்டாயமில்லை என்றும், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணிலிருந்து கூடுதல் மதிப்பெண்களை பெற விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் அல்லது ஜூ...

உரங்கள் விலை உயர்வு, தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகள்..!

Image
புதுக்கோட்டையில் உரங்கள் விலை உயர்வு மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக தவிக்கிறார்கள் விவசாயிகள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் போன்ற உரங்களின் விலை கடுமையாக உயர்ந்தது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஏற்பட்ட உரத்தட்டுப்பாடு காரணமாகவும் புதுக்கோட்டை விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/99881/farmers-suffering-from-Fertilizer-price-hike-and-shortages----.html

யுஜிசி நெட் தேர்வு 3வது முறையாக ஒத்திவைப்பு - ரமேஷ் பொக்ரியால்

Image
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி பேராசியர்களுக்கு நடத்தப்படும் நெட் தேர்வானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்றாவது முறை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்றானது நாடுமுழுவதும் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ?Announcement Keeping in mind the safety & well-being of candidates and exam functionaries during #covid19outbreak , I have advised @DG_NTA to postpone the UGC-NET Dec 2020 cycle (May 2021) exams. #Unite2FightCorona pic.twitter.com/5dLB9uWgkO — Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 20, 2021 ஏற்கெனவே இரண்டுமுறை நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே 2ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த தேர்வு தற்போது மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தேர்வு மீண்டும் நடத்தப்படுவதற்கு ...

சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு - யுபிஎஸ்சி அறிவிப்பு

Image
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் மற்றும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையில் 30 வயதுக்கு கீழானோர் மற்றும் சிறுவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99763/UPSC-announced-that-Civil-service-interview-postponed-due-to-corona-s...

தி.மலை ராணுவ ஆள்சேர்ப்பு பேரணியில் வென்றோருக்கான பொது நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு

Image
ஏப்ரல் 25-ஆம் தேதியன்று, சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த, திருவண்ணாமலை ராணுவ ஆள்சேர்ப்பு பேரணியில் வெற்றி பெற்றவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'இந்திய ராணுவத்தில் சேருங்கள்' ( http://www.joinindianarmy.nic.in ) என்ற இணையதளத்தில் புதிய தேதி பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். தேதிகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் சென்னையிலுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று புதிய அனுமதி அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.‌ கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மாவட்டம் ஆகிய சென்னை (தலைமையகம்) ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் உள்ள தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ராணுவ வீரர் தொழில்நுட்பம், ராணுவ வீரர் உதவி செவிலியர், ராணுவ வீரர் உதவி செவிலியர் கால்நடை, ராணுவ வீரர் எழுத்தர், பண்டகக் காப்பாளர் தொழில்நுட்பம், ராணுவ வீரர் பொதுப்பணி, ராணுவ வீரர் வர்த்தகர் உள்ளட்ட பணிகளில் ச...

+2 பொதுத்தேர்வு அட்டவணை 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் – தேர்வுகள் இயக்ககம்

Image
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு  தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.  தமிழகத்தில் கொரோனாவைரஸ் பரவலின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை தேர்வுகள் இயக்ககம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு  தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. மே 2ஆம் தேதி தொடங்கவிருந்த தேர்வு, கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்றுவரும் செய்முறைத் தேர்வு மட்டும் திட்டமிட்டப்படி நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99625/Directorate-of-board-exam-said--...

கொரோனா பரவல் எதிரொலி: கேரளாவில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு!

Image
கேரள மாநிலத்தில் கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தேர்வு விவகாரத்தில் தலையிட்டதை அடுத்து திங்கள் முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.    ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், மலையாள பல்கலைக்கழகம் மற்றும் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக தேர்வுகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.  “அனைத்து ஆஃப்லைன் தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு துணைவேந்தர்களிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். தேர்வுகளை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு தேர்வுக்கான புதிய தேதிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்” என கேரள மாநில ஆளுநர் அலுவலக தரப்பு தெரிவித்துள்ளது.  கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களில் 1,04,191 பேர் கொரோனா த...

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி?

Image
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவரி கேள்வி பதில்போல் இல்லாமல், விரிவான வகையில் பதில் அளிக்கும் வகையில் கேள்வி கேட்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99577/Permission-to-look-at-the-book-and-write-anna-university-semester-exam.html

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

Image
தமிழகத்தில் வரும் மே 5-ஆம் தேதி துவங்கி 31-ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித்துறை நடத்த திட்டமிட்டிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது . அதே நேரத்தில் செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் ஆரோக்கிய நலன் மீதுள்ள அக்கறையின் காரணமாக அரசு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99552/Class-Twelve-Public-Board-Examination-by-School-Education-Department-which-was-Scheduled-to-hold-from-may-5-to-may-31-has-been-postponed-by-TN-Government-due-to-COVID19-cases-hike-in-the-state.html

ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Image
ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இணைந்து படிப்பதற்கு ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான ஜெஇஇ மெயின் தேர்வுகள் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி நடக்க இருந்தது. அந்தத்தேர்வுகள் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99506/Postponement-of-JEE-Main-Exams-scheduled-for-April-27.html

சீருடை பணியாளர் உடற்தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

Image
சீருடை பணியாளர் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித்தேர்வு உள்ளிட்டத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.    இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு உடற்தகுதித்தேர்வு ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் நடத்தப்பட இருந்தது. அந்தத்தேர்வுகள் சில நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காக  ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99461/Tamil-Nadu-Uniformed-Services-Recruitment-Board-interview-and-physical-test-Postponed.html

மின்வாரிய உதவி பொறியாளர் பணிகளுக்கான கணினி மொழித்தேர்வு ஒத்திவைப்பு!

Image
மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கணினிவழித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 24 முதல் மே 16 வரை நடைபெற இருந்த கணினி வழித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in   என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99456/Cancellation-of-computer-language-test-for-electrical-assistant-engineer-jobs.html

நிழல் இல்லா நாள்: தஞ்சையில் கண்டுகளித்த மாணவர்கள்!

Image
தஞ்சாவூரில் செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகக் கூடிய நிழல் இல்லா நாள் சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்தது. இதை மாணவர்கள் கண்டுகளித்தனர். தமிழகத்தில் இம்மாதம் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் சில ஊர்களில் நிழல் இல்லா நாள் வருகிறது. அதாவது, குறிப்பிட்ட நாளில் நண்பகலில் மிகச் சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது, நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல், அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த நாளைதான் 'நிழல் இல்லா நாள்' என்றும், 'பூஜ்ஜிய நிழல் நாள்' எனவும் கூறுகிறோம். இதன்படி, ஏப்.-10 ஆம் தேதி கன்னியாகுமரி, நாகர்கோவிலிலும், 11-ஆம் தேதி திருவனந்தபுரம், திருச்செந்தூரிலும் என தொடர்ந்து ஒவ்வொரு நாளாக சில ஊர்களில் 'நிழல் இல்லா நாள்' நிகழ்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தஞ்சாவூரில் சனிக்கிழமை பிற்பகல் 12.12 மணிக்கு நிழல் இல்லா நாள் நிகழ்ந்தது. இதையொட்டி, தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியிலும், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில...

நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை: விவசாயிகள் கண்ணீர்

Image
அறுவடை செய்த நிலக்கடலைக்கு உரியவிலை கிடைக்கவில்லை என திருப்பூர் விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்கள்.  நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிப்பதைபோல, கடலைக்கும் நிர்ணயித்தால்தான் அடுத்த ஆண்டுகளில் கடலை சாகுபடி செய்யமுடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/99354/ground-nuts-not-getting-the-right-price--Farmers-tear-up.html

விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!

Image
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் வேதனை அடைந்த விவசாயிகள் அவற்றைப் பறித்து ஏரியில் கொட்டிச் சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொள்கின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளியை, விவசாயிகள் நேரடியாக ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட், கிருஷ்ணகிரி, ஓசூர் உழவர் சந்தை, ஓசூர் பத்தலப்பள்ளி சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று ஏல முறையில் விற்பனை செய்கின்றனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பின் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு போதிய மழையின்றி, நிலத்தடி நீர்மட்டம் சரிந்த நிலையிலும், தக்காளிக்கு உரிய விலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்துள்ளனர். தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விடவும் முடியவில்லை. இழப்பினை சந்தித்தாலும், தோட்டத்தை பராமரிக்க, பறிக்கப்படும் தக்காளியை ஏரியில் ...