Posts

Showing posts from March, 2021

அன்று 'ட்ரெண்டிங்' கைடு... இன்று விவசாயி! - மதுரை நாகேந்திர பிரபுவை மாற்றிய கொரோனா காலம்

Image
கொரோனோவுக்கு முன் பிரபல சுற்றுலா வழிகாட்டியாக இருந்த மதுரை நாகேந்திர பிரபு, இப்போது தீவிர விவசாயியாக விளைநிலத்தில் களமாடி வருகிறார். உலக அளவில் ட்ரெண்டான இந்த உத்வேக மனிதரின் இந்த மாற்றத்துக்குப் பின்னால் நம் அனைவரின் கவனத்துக்கும் உரிய சில விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழ் நாச்சிகுளம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர் நாகேந்திர பிரபு. கடந்த 16 ஆண்டுகளாக தமிழக கலாசாரத்தை வெளிநாட்டினருக்கு எடுத்துரைக்கும் நோக்கில் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் கைடு (வழிகாட்டி) ஆக பணியாற்றி வந்தார். தமிழக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரக்கூடிய முக்கிய தளமாக விளங்கும் மதுரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் சுற்றுலா தலங்களின் சிறப்புகளை எடுத்துரைப்பதில் வழிகாட்டியின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. செய்யும் பணியினை நேசித்து முழுமையாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நாகேந்திர பிரபு தமிழகத்தையும், தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம், நாகரிகத்தை தெரிந்து கொள்ள வரும் வெளிநாட்டவர்களுக்கும் வெளி மாநிலத்தவர்ளுக்கு மதுரை மீன...

அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம்: மாதிரி ஆளுமைத்தேர்வு அறிவிப்பு

Image
மத்திய தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வுகளின் வெற்றிபெற்றவர்களுக்கு, அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் மாதிரி ஆளுமைத்தேர்வினை நடத்துகிறது. தமிழகத்திலுள்ள இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்று மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவிகளைப் பெறவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு உருவான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் மூலமாக  ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதுவரை வெற்றி பெற்று இந்திய அளவில் செம்மையாக பணியாற்றி வருகின்றார்கள். இந்த மையம் கடந்த ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக சென்னையில் பசுமை வழிச் சாலையில் தனி வளாகத்தில் இயங்கிக்கொண்டு வருகிறது. தேர்வர்கள் தங்குவதற்கு அறைகளும், கட்டணமின்றி உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. இருபத்தி ஐந்தாயிரம் நூல்கள் கொண்ட சிறந்த நூலகம் ஒன்றும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது.   25.03.2021 அன்று மத்திய தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வுகளின் இறுதி முடிவில் இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 19 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், இவர்கள் புது டில்லியில் ஆளுமைத் தேர்வை சந்திக்க உள்ளார்கள். மு...

அண்ணல் அம்பேத்கர் நினைவு கோப்பை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி

Image
கைகளை உயர்த்துவோம் அமைப்பு பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு   அண்ணல் அம்பேத்கர் நினைவு கோப்பை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி போதைப்பொருளை ஒழிப்போம் சமுதாயத்தை பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்!!! 2021 சட்டமன்ற தேர்தலில் 100 % வாக்குபதிவு நமது இலக்கு!! தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை நானும் எனது குடும்பத்தாரும் எந்த வேட்பாளர் இடமும் தேர்தலில் வாக்களிக்க பணம் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதி ஏற்போம் !!ஜனநாயகம் காப்போம்!!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு: முறையாக கண்காணிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

Image
நீட் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ முறையாக கண்காணிக்கும் என நம்புவதாக உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை தெரிவித்திருக்கிறது. நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகராக செயல் பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட ரஷீத் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கி்ளை உத்தரவிட்டிருக்கிறது. கேரளா மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், " நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை...

கேந்திரிய வித்யாலயா பள்ளி சேர்க்கைக்கு ஏப்.1 முதல் ஆன்லைனில் பதிவு துவக்கம்

Image
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம். ஒன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 7 மணி வரை https://ift.tt/2OyDtu2 என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்டு செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம். இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும். 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையின்படி https://ift.tt/2EmeBB8 என்ற இணையதளத்தில் 11-ஆம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது நாடு முழுவதும் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/news...

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆந்திராவில் ஜெகன் அரசு ஆதரவுடன் முழு அடைப்பு போராட்டம்

Image
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய முழுஅடைப்பு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவுடன் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. முழு அடைப்பு காரணமாக திருப்பதியில் பேருந்துகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதியடைந்தனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழுஅடைப்பு நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மத்திய பாஜகவுடன் நெருக்கமாக உள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விசாகப்பட்டினம் எஃகு ஆலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்க்கும் அதே நேரத்தில் இன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாய சங்கங்களுக்கு ஆதரவாகவும், விசாகப்பட்டினம் எஃகு ஆலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளது. ஆந்திர மக்களின் உரிமை மற்றும் லட்சக்கணக்கான தெலுங்கு மக்...

ஜேஇஇ முதன்மை தேர்வு: தமிழகத்தின் அஷ்வின் ஆபிரகாம் உள்பட 13 பேர் முதலிடம்

Image
பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின் ஆபிரகாம் உள்ளிட்ட 13 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிபெண்களை பெற்றுள்ளனர்.  ஜேஇஇ முதன்மை தேர்வுகளை எழுத சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பதிவுசெய்திருந்த நிலையில், தேர்வுகள் கடந்த 16ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 334 நகரங்களில்  நடைபெற்றது. தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.  இந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகின்றன. ஒரே மாணவர் நான்கு முறை வரை தகுதி தேர்வை எழுதலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  அடுத்து ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்வுகளுக்கு பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஆபிரகாம் தகுதித் தேர்வில் 100 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalai...

வெளியானது சிமேட் 2021 நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு!

Image
2021 ஆம் ஆண்டிற்கான பொது மேலாண்மை சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் நுழைவுச் செட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் cmat.nta.nic.in இந்த லிங்கை பயன்படுத்தி தங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  வரும் 31 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெற உள்ளது. முதல் ஷிப்ட் காலை 9 முதல் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 3 முதல் 6 மணி வரையிலும் நடைபெற உள்ளது. Innovation மற்றும் Entrepreneurship பிரிவை தேர்வு செய்த மாணவர்களுக்கு தேர்வில் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் cmat.nta.nic.in  என்ற இந்த லிங்கை பயன்படுத்தி விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை கொண்டு நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.  ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்த தேர்வில் மொத்தம் 500 மதிப்பெண்கள். 125 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களும் நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. ஆங்கில் வழியில் இந்த தேர்வு நடைபெறுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil ...

300 விவசாயிகள் உயிரிழப்பு... அரசுக்கு ரூ.814 கோடி இழப்பு... - டெல்லியில் தொடரும் போராட்டம்

Image
300 விவசாயிகள் உயிர் இழந்தும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் இதுவரை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு ரூ.814 கோடி இழப்பு என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் சூழ்நிலையில் மறுபுறம் குளிர்காலத்தை நிறைவு செய்துவிட்டு வெயில் காலத்திற்கு நுழைந்திருக்கிறது டெல்லியில் முக்கிய எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளின் போராட்டம். கடந்த ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் இருந்து "டெல்லி சலோ" என நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் பேரணியை டெல்லிக்குள் நுழையாதவாறு ஹரியானா மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடுப்பு வேலிகள் தகர்த்தெறியப்பட்டு விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்மீது தடியடி நடத்திய காவல்துறையினர் அவர்களை டெல்லிக்குள் நுழையாதவாறு தடுத்து நிற...

கூடுதல் நீட்தேர்வு மையங்களை அமையுங்கள் - தேர்வு வாரியத்துக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

Image
நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், தங்கள் மாநிலங்களிலேயே தேர்வெழுதும் வகையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 2021-22ம் கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களிடம் விண்ணப்பங்களை வரவேற்று, தேசிய தேர்வு வாரியம், பிப்ரவரி 23ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், பிப்ரவரி 23 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் எனவும், ஏப்ரல் 18ம் தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் அதற்காக நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பெறத்துவங்கிய சில மணி நேரங்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாக கூறி, இந்த தேர்வு மையங்கள், ஆன்லைன் விண்ணப்ப படிவங்களில் இருந்து நீக்கப்பட்டன. இதை எதிர்த்தும், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கக்கோரியும் விழுப்புரம் மாவட்டம், த...

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் உருளைக்கிழங்கு விலை கடும் வீழ்ச்சி... ஏன்?

Image
சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பல மாநிலங்களில் உருளைக்கிழங்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு குவின்டால் உருளைக்கிழங்கு தற்போது ரூ.500-ல் இருந்து ரூ.700 ரூபாய் வரை விற்கப்படுவதாக முக்கிய சந்தைகளில் திரட்டப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் மார்ச் மாதத்திலேயே உருளைக்கிழங்கு ஒரு குவின்டால் ரூ.1,200-ல் இருந்து ரூ.1,300 வரை விற்கப்பட்டதாக விவசாயிகள் நினைவுகூர்ந்து வேதனைப்படுகிறார்கள். உருளைக்கிழங்கு அதிகம் உற்பத்தி செய்யப்படும் பிராந்தியங்களில் உள்ள மொத்த சந்தைகளை தவிர, உருளைக்கிழங்கு அதிகம் சில்லறை வியாபாரத்தில் விற்கப்படும் டெல்லி போன்ற இடங்களிலும் உருளைக்கிழங்கின் விலை சரிந்துள்ளது. தேசிய தலைநகரான டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு ஏழு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுவதாக சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் உருள...

கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து; ஆன்லைனில் இறுதி தேர்வுகள்: தமிழக அரசு

Image
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கருத்தில் கொண்டு கல்லூரிகள் இணைய வழி மூலமாக மட்டுமே பாடம் எடுக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி வாரத்தில் ஆறு நாட்களுக்கு இணைய வழியில் வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல பருவத் தேர்வுகளும் இணையத்தின் வழியாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருடன் நடத்திய ஆலோசனையில், அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் கல்விக்கூடங்களின் இயக்குநர்கள் சொன்ன பரிந்துரைகளின் அடிப்படிடையில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளை ஏற்று இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனால் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை ஆன்லைனில் மட்டுமே நடத்திட கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு செயல்முறை வகுப்புகள் மற்றும் அது சார்ந்த தேர்வுகளை வரும் 31/ஆம் தேதிக்குள் முடித்திடவும் அரசு ஆணையிட்டுள்ளது. இது உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நிகர்நிலை கல்லூரிகள...

நாம் தமிழர் ஆட்சியில் மரங்களை வெட்டும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை : சீமான்

Image
நாம் தமிழர் ஆட்சியில், மரங்களை வெட்டுவது குற்றமென அறிவித்துக் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். <blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மனிதர்களைக் கொலை செய்வது குற்றம்போல, மரங்களை வெட்டுவதும் குற்றமென அறிவித்துக் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்!<br><br>மரங்கள் இல்லையேல் மனிதர்கள் இல்லை!<a href="https://twitter.com/hashtag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#வெல்லப்போறான்விவசாயி</a><a href="https://twitter.com/hashtag/NTK4Tamilnadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NTK4Tamilnadu</a> <a href="https://twitter.com/hashtag/Vote4Change?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Vote4Change</a> <...

“தொழில்நுட்பம் சார்ந்த உயர் கல்வியை அதிகளவிலான பெண்கள் படிக்க வேண்டும்” -குடியரசுத் தலைவர்

Image
அதிகளவிலான பெண்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உயர்க் கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் ரூர்கேலாவில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவன பட்டமளிப்பு விழாவில் இதனை தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர்.  The country needs more of our girls to pursue higher education, especially in Science, Technology, Engineering and Mathematics. Growth and excellence of women in technical areas will add a new dimension to our national development. pic.twitter.com/W4DnmwVfkJ — President of India (@rashtrapatibhvn) March 21, 2021 “நம் நாட்டில் பெண்கள் உயர் கல்வியைத் தொடர வேண்டும். குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளில் அதிகளவிலான பெண்கள் படிக்க வேண்டும். தொழில்நுட்ப துறைகளில் பெண்களின் சிறப்பான பங்களிப்பு நமது நாட்டின் வளர்ச்சிக்கு புதியதொரு பரிணாமமாக அமையும்” என அவர் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tam...

“பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்படும்!” - மகாராஷ்டிரா அரசு

Image
“கொரோனா தாக்கத்தினால் மாநிலத்தில் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வின்போது கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்படும். பெரும்பாலான பள்ளிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்” என மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.  வரும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை அங்கு தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை கல்வி அமைச்சர் உறுதி செய்துள்ளார். இதற்கு முன்னதாக மாணவர்களுக்கு அவரவர் படிக்கின்ற பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும் என சொன்னதையும் அவர் உறுதி செய்தார். அதன்படி 80 மார்க் கொண்ட தாள்களுக்கு கூடுதலாக 30 நிமிடங்களும், 40 மார்க் கொண்ட தாள்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்களும் நேரம் கொடுக்கப்படும் என அந்த மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான செய்முறை தேர்வையும் அரசு நடத்த உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.C...

'நாட்டை விற்றுவிடுவார்கள்': கர்நாடக விவசாயிகளை போராட அழைக்கும் ராகேஷ் டிக்கைட்

Image
இந்த விவசாயிகள் போராட்டம் நடத்தப்படாவிட்டால் , விரைவில் நாடு விற்கப்படும் , அடுத்த 20 ஆண்டுகளில் உங்கள் நிலத்தை இழப்பீர்கள் என்று பாரதிய கிசான் யூனியன் ( பி . கே . யூ ) தலைவர் ராகேஷ் டிக்கைட் குற்றம் சாட்டினார் கர்நாடகாவின் சிவமோகாவில் நடந்த   விவசாயிகள் கூட்டத்தில் பேசிய ராகேஷ் டிக்கைட் , " டெல்லியில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் செய்கிறார்கள் , இந்த போராட்டம் நீண்ட காலமாக தொடரும் . இந்த 3 கறுப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை ஒவ்வொரு நகரத்திலும் இத்தகைய போராட்டத்தைத் தொடங்க வேண்டும் , குறைந்தபட்ச ஆதார விலை மீதான சட்டம் இதுவரை கொண்டு வரப்படவில்லை . " என்று அவர் கூறினார். மேலும் " நீங்கள் கர்நாடகாவில் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் . உங்கள் நிலத்தை பறிக்க சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது , எனவே இனி பெரிய நிறுவனங்கள் விவசாயம் செய்யும் . குறைந்த ஊதியத்துக்கு உழைப்பைப் பயன்படுத்த தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன ." என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் " நீங்கள் பெங்களூர...