Posts

Showing posts from August, 2021

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு

Image
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு - தனியார் கல்லூரிகளையும் மாணாக்கர் மற்றும் ஊழியர்களின் விடுதிகளையும் திறக்க அனுமதித்துள்ளது. மாணவ - மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், கல்லூரி நிர்வாகம் இதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி போட தவறிய கல்லூரி மாணவ - மாணவியர் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி - கல்லூரி மாணாக்கர் அரசுப் பேருந்துகளில் பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM ...

அண்ணாமலை, ஜெயலலிதா பல்கலைக்கழகங்களை இணைக்கும் மசோதா - சட்டமன்றத்தில் இன்று தாக்கல்

Image
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்வார் என்றும் சட்டமன்றத்தில் இன்றே நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு உடனடியாக துணை வேந்தர் நியமனமும் நடைபெற்றது. தற்போது புதிய பல்கலைக்கழகத்திற்கான தேவை இல்லையெனக் கூறி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என ஏற்கனவே அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இதனையும் படிக்க: மதுரை: குப்பையில் கிடந்த காலாவதியான பொருட்களை சாப்பிட்ட பள்ளி மாணவன் உயிரிழப்பு  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/114350/Annamalai--Jayalalitha-Universities-merge-Bill---Filed-in-the-Assembly-today.html

பள்ளி, கல்லூரி திறப்பு: கேரளாவிலிருந்து வரும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Image
பள்ளி, கல்லூரி திறப்பு: கேரளாவிலிருந்து வரும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் முடிவடையவிருக்கும் நிலையில், தளர்வு நீட்டிப்பு குறித்தும் கொரோனா பாதிப்பு குறித்தும் மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் செப்.1ம் தேதி பள்ளிக் கல்லூரி திறப்பு உறுதியென்ற முடிவை குழு எடுத்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், பிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருக்க வேண்டும் என்றும்; பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் படிக்கலாமே .. தமிழகத்தில் செப்.1 ஆம் தேதி பள்ளி, கல்லூரி திறப்பது உறுதி: தமிழ்நாடு அரசு திட்டவட்டம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai -...

65% பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பின்போது குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகிறார்கள் - ஆய்வு முடிவு

Image
65% பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பின்போது குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகிறார்கள், மேலும் 7% ஆசிரியர்களும் சாப்பிடுகிறார்கள் என்று மும்பையில் ஓர் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கவனித்து வருகின்றனர். ஆரம்ப வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு நடந்துகொண்டிருக்கும் போதே உணவுகளை ஊட்டுகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் 65%க்கும் அதிகமான பெற்றோர்களே ஆன்லைன் வகுப்பின்போது தங்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதாகத் தெரிவித்திருக்கின்றனர். மேலும், கிட்டத்தட்ட 55% மாணவர்கள் உணவு ஆன்லைன் வகுப்பின்போது உணவு உண்பதை ஆசிரியர்கள் கவனிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அதில் நான்கில் ஒரு பங்கு பெற்றோர் குழந்தைகளுக்கு சூடாக உணவு வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த சர்வேயில் 7% ஆசிரியர்களும் ஆன்லைன் வகுப்பின்போது உணவு உண்பதை ஒத்துக்கொண்டுள்ளனர். கடந்த வருடம் ஆன்லைன் வகுப்பின்போது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அதுகுறித்த சரியான புரிதல் இல்லாததால் வகுப்புகளில் மட்டும் ...

“விவசாயிகளின் தலையை உடைக்க” என்றுசொன்ன அதிகாரியை பாதுகாக்கிறாரா ஹரியானா முதல்வர் கட்டார்?

Image
ஹரியானா மாநிலம் கர்னலில் போராடிய விவசாயிகளுக்கு எதிராக "தலையை பிளக்க வேண்டும்" என போலீஸாருக்கு உத்தரவிட்ட  ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்ஹா "மோசமான வார்த்தைகளைத் பயன்படுத்தினார் என்றாலும் கண்டிப்பு முக்கியம்” என மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று வெளியிட்ட அறிக்கையில் , "அதிகாரியின் வார்த்தைகள் தேர்வு சரியாக இல்லை என்றாலும் , அங்கு சட்டம் ஒழுங்கு நிலை கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய கண்டிப் பாக செயல் பட வேண் டியது அவசியம். அதிகாரிக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் , அது முதலில் மாவட்ட நிர்வாகத்தால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். டிஜிபியும் அதை கவனித்து வருகிறார் " என்று அவர் கூறினார். இந்த சம்பவம் குறித் து பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் , மாநில அரசின் இந்த நடவடிக்கை க்கு ஆதரவாக, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் பொறுப்பு என்று கூறினார். ஆனால் நேற்று , ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா , ஐஏஎஸ் அதிகாரியின் விமர...

சீனா: பள்ளிகளில் 7 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கு தடை

Image
ஆறு மற்றும் ஏழு வயது குழந்தைகளுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. மிகுந்த போட்டி நிறைந்த கல்வி முறையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க இந்த முயற்சியை செய்துள்ளதாக அந்த அரசு கூறியுள்ளது. மாணவர்கள் தொடக் கக்கல்வி முதல் கல்லூரிப்படிப்புகள் வரை தொடர்ந்து தேர்வெழுத வேண்டி யுள்ளது . ஆனால், இந்த அழுத்தம் மாணவர்களின் "உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு" தீங்கு விளைவிப்பதாக சீனா கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கல்வி அமைச்சகத்தின் ஒரு அறிக்கையில் , "பள்ளிக் கல்வியின் தேர்வுகள் ஒரு அவசியமான பகுதியாகும் . ஆனால் சில பள்ளிகளில் அதிகப்படியான தேர்வுகள் போன்ற பிரச்சினைகள் உள்ளன , இது மாணவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்துகிறது , இது சரிசெய்யப்பட வேண்டும்" என தெரிவித்தது. தற்போதைய புதிய விதிக ளின்படி சீனாவில் பள்ளிப்படிப்பில் ஒரு பருவத்திற்கு உரிய தேர்வு மற்றும் தேர்வுகளின் எண்ணிக்கை கள் குறித்து கட்டுப் பாடுகளை விதித்துள்ளது . "தொடக்கப் பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் காகித அடிப்படையிலான தேர்வ...

முதல் தலைமுறை பட்டதாரிகளின் வேலையின்மையால் பறிபோகும் நரிக்குறவர் மாணவர்கள் எதிர்காலம்

Image
முதல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வேலை கிடைக்காததால் நரிக்குறவர் சமூக இளம் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நரிக்குறவர் சமூக பட்டதாரி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாமதி ஊராட்சியில் நரிக்குறவ மக்கள் வாழும் பகுதி உள்ளது. இங்கு, 150-க்கும் மேற் பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனர். இச்சமூக இளைஞர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளனர். அரசு தங்கள் சமூக இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நரிக்குறவ மக்களின் பிரதான தொழில் மற்றும் பாரம்பரிய தொழிலாக கருதப்படுவது வேட்டையாடுவது மட்டும்தான். ஆனால் வேட்டை யாடுவதை அரசு தடை செய்துள்ளது. வேறு தொழில்களை கற்பதற்கான வாய்ப்பு, வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை. பாரம்பரியமாக வைத்துள்ள துப்பாக்கிகளுக்கு உரிமம் பெற அரும்பாடுபட்டு பிழைப்பு நடத்தி வருகிறார்கள். மேலும் மீன்பிடி காலங்களில் மீனவர்களுக்கு உதவித்தொ...

'அரசு நடத்தும் தலிபான்களால்' நாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது : ராகேஷ் டிக்கைட்

Image
ஹரியானா விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து ஹரியானா மாநில அரசாங்கத்தை விமர்சித்த பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) தலைவர் ராகேஷ் டிக் கைட் , " அரசு நடத்தும் தலிபான்களால் நாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். ஹ ரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் , மாநில பாஜக தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஹரியானாவில் விவசாயிகள் கர்னல் பகுதியை நோக்கிச் சென்றபோது , நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித் ததாக விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி யதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விவசாயிகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக மாநிலத்தில் பல சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் , சுங்கச்சாவடிகள் உட்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் நேற்று முதல் போராட்டத்தில்  ஈடுபட் டு வருகின்ற னர்.  இது குறித்து பேசிய பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) தலைவர் ராகேஷ் டிக் கைட் , " அரசு நடத்தும் தலிபான்களால் நாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது . விவசாயிகள...

இந்தியா அவமானத்தில் தலைகுனிகிறது: ஹரியானா விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு ராகுல் கோபம்

Image
ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடுமையாக கண்டித்துள்ளார். ஹரியானா போராட்டத்தில் காயமடைந்த ஒரு விவசாயியின் படத்தை பகிர்ந்த ராகுல்காந்தி , " மீண்டும் விவசாயிகளின் இரத்தம் சிந்தியது, இந்தியா வெட்கி தலை குனிகிறது " என்று ட்வீட் செய்தார் . फिर ख़ून बहाया है किसान का, शर्म से सर झुकाया हिंदुस्तान का! #FarmersProtest #किसान_विरोधी_भाजपा pic.twitter.com/stVlnVFcgQ — Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2021 ஹரியானா மாநிலம் கர்னலில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது ஹரியானா காவல்துறையினர் லத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பல விவசாயிகள் காயமடைந்தனர் . Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/114125/India-bows-in-shame-Rahul-after-police-lathi-charge-farmers-in-Haryana.html

18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி: பொது சுகாதாரத்துறை

Image
18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு நாளைமுதல் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தவேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதிசெய்ய மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் கடிதம் எழுதியிருக்கிறார். இந்த சூழலில், அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுதான் கல்லூரிக்கு வரவேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். நாட்டிலேயே சென்னையில்தான் 90.11% ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.       Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/114123/Vaccination-of-college-students-over-18-years-of-age-from-tomorrow--Department-of-Public-Health.html

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிய மறுத்த மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்

Image
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு பின்னர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பணி செய்ய மறுக்கும் மாணவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் துறை சார்ந்த காலி பணியிடங்கள் இருந்தும் தமிழ்நாட்டில் பணி செய்ய பல மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை முடித்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணி செய்ய மறுத்த மாணவர்களின் பட்டியலை எடுக்க வேண்டும் எனவும், விதி மீறிய மாணவர்களிடமிருந்து தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, தாலுகா மருத்துவமனைகளில் அல்லாமல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணி ஒதுக்கினால் அனைவரும் சேவையாற்ற தயாராகவே இ...

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

Image
அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2020 நவம்பர், டிசம்பர் 2021 ஏப்ரல், மே மாத செமஸ்டர் இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.   அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டமசோதா தாக்கல் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/113979/Anna-University-Undergraduate-and-Postgraduate-Semester-Examination-Results-Published.html

பொறியியல் படிப்பில் மொத்தமே 6.14% அரசுப்பள்ளி மாணவர்கள்தான் - அமைச்சர் பொன்முடி

Image
அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 0.83 சதவீதம் பேர்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உயர் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த மாற்றங்களால்தான் உயர்கல்வித்துறை வளர்ச்சி அடைந்ததாகவும், கிராமப்புற மாணவர்களும் உயர் கல்வியில் அதிகளவில் சேரும்நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் 0.83 சதவீதம் 2020-21 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர். இதேபோன்று அனைத்து பொறியியல் கல்லூரிகளை சேர்த்தாலும் மொத்தமாக 6.14 சதவீதம் மாணவர்களும், கால்நடைப்படிப்பில் 3 சதவீதமும், மீன்வளக் கல்லூரிகளில் 3.7 சதவீதமும், சட்டப்படிப்புகளில் 3.3 சதவீதமும், 6.79 சதவீதம் மாணவர்கள் வேளாண் படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM fro...

தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கம் ஏன்? - டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம்

Image
மொழி பாடப்பிரிவில் இடம்பெறக்கூடிய பாடத்திட்டம் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருக்கிறது. பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கம் குறித்து டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது, அதில், தனி மனிதர், ஒரு சமூக அமைப்பின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இருக்கக் கூடாது எனவும், பாடத்திட்டம் ஒருதலைப்பட்சமாகவும் இருக்கக் கூடாது எனவும் டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. மேலும் பாடப்பிரிவுகளை நீக்கியதில் உள்நோக்கம் ஏதும் இல்லை எனவும், படைப்பாளிகளின் சாதி, மதம், மொழி பின்புலத்தை வைத்து டெல்லி பல்கலைக்கழகம் செயல்படுவதில்லை எனவும் விளக்கமளித்திருக்கிறது. முன்னதாக, டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல்களை கொடுத்து வந்தனர். அந்த வரிசையில் திமுக எம்பியும் எழுத்தாளருமான தமிழ்ச்சி தங்க பாண்டியனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். டெல்லி பல்...

தமிழக பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியீடு

Image
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் ரேண்டம் எண்ணை வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு 1,74,171 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/113854/engineering-random-number-released.html

ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு - சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

Image
மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவது அனுமதிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. மத்திய அரசுத்தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட...

பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம்: கடந்தாண்டை விட 13 ஆயிரம் கூடுதல் விண்ணப்பங்கள்

Image
கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதன்படி, இந்த ஆண்டு ஒரு 1,74,171 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். கடந்த ஆண்டு 1,60,834 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13,000க்கும் அதிகமானோர் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது. வரும் 28 ஆம்தேதி சான்றிதழ் சரிபார்ப்புப்பணிகளும், வரும் செப்டம்பர் 4 ஆம்தேதி தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்புப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7 முதல் 11 ஆம்தேதி வரை நடைபெறும் என்றும், ஆன்லைன் பொது கலந்தாய்வு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 14 வரை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...

கடலூர்: வீராணம் ஏரி நிரம்பியதால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

Image
சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான கடலூர் வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 47 புள்ளி 5 அடியில், 47 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. மேலும் அணைக்கு 500 கனஅடி நீர் வந்துகெண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி, அப்படியே நீர் முழுவதுமாக புதிய மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. இதில் சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 48 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரி நிரம்பியதால் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 44 ஆயிரத்து 800 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/113746/Cuddalore--Due-to-the-full-of-Veeranam-Lake--water-has-been-released-for-irrigation.html

பி.இ மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை - தமிழக அரசு

Image
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.   தமிழகத்தில் நடப்பாண்டு இளநிலை பொறியியல் படிப்புக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பி.இ., பி.டெக் ஆகிய இளநிலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு 10, +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடைய படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் எடுத்த மதிப்பெண்களும், பொறியியல் தொழிற்கல்விப் பாடப்பிரிவில் பயின்றவர்களுக்கு தொழிற்கல்வி கருத்தியல் மற்றும் செயல்முறைப் பாடங்களுடன் தொடர்புப் பாடங்களாக இருக்கும் கணிதம், இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில் எடுக்கப்பெற்ற மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.   இந்த நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News...

”நெற்பயிர் காப்பீடு குறித்து அவதூறு பரப்புகிறார்கள்” - அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்

Image
 காழ்ப்புணர்ச்சி காரணமாக நெற்பயிர் காப்பீடு குறித்து அவதூறு பரப்புகிறார்கள் என்று  தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “ அரசை குறைகூறி அறிக்கை விடுபவர்கள் சாதாரணமாக குறைகூறி விடுகிறார்கள். குறுவை சாகுபடியை பொருத்தவரையில் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் 655 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு குறுவை நெல்லை சாகுபடி செய்ய 3,27,350 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் விவசாயிகளை எப்படி காப்பீடு தொகையை கட்ட சொல்ல முடியும். குறுவை முடிந்து சம்பா நடவு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கு காப்பீடு தொகை எவ்வளவு கட்டுவதென்று அறிவிக்கப்படும். பின்னர் நடைமுறை துவக்கப்படும். பயிர்களுக்கு காப்பீடு இல்லாவிட்டாலும், பேரிடர் காலங்களில் குறுவை பயிர் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான இழப்பீடு பேரிடர் நிவாரணம் மூலமாக வழங்கப்படும் என்று ஏற்கெனவே முதல்வர் ஆணையிட்டுள்ளார். குறுவை பயிர் அறுவடை முடிந்த நிலையில், இதுவரை குறுவை சாகுபடி செய்தவர்கள் யாரும் இழப்பீடு கேட்கவில்லை. இந்நிலையில் காப்பீடு தொ...

“பயிர்க் காப்பீடு செய்து கொள்ளுங்கள்” - விவசாயிகளுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் வேண்டுகோள்

Image
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று விடியக்காலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் காரீப் பருவத்தில் பயிர்க் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், சாகுபடி செய்த மணிலா மற்றும் கம்பு பயிர்களுக்கு 31.08.2021-க்குள் பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக விவசாயிகள் போதிய மழை இல்லாததால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வந்தனர். இதனிடையே இன்று அதிகாலையில் இருந்து கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலை 11 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ததால் பணிக...