பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு : முழு விபரம்

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது

கூட்டுறவு சங்கங்களின் பயிர்க்கடன் தள்ளுபடி வழிகாட்டு நெறிமுறைகளின்படி “வேளாண்மை சாராத விவகாரங்களுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது. பயிர்க்கடன்களுக்காக மானியம் பெற்றிருந்தால் எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். குற்ற நடவடிக்கை, நிதிமுறைகேடுகளுக்கு உள்ளானவற்றிற்கு கடன் தள்ளுபடி இல்லை, கூட்டுறவு சங்களுக்கு மொத்தம் தள்ளுபடி தொகை வட்டியுடன் தவணைகளில் 5 ஆண்டுகளில் விடுவிக்கப்படும்

image

நபார்டு வங்கிக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையை வட்டியுடன் அரசே செலுத்தும், ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழ், நிலுவையின்மைச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். தள்ளுபடி செய்ய தகுதியான கடன்களை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் புதிய கடன்களைப் பெற தகுதியுடையவர்கள். நிலுவையின்மை சான்று வழங்கியவுடன் அசல் நிலப்பதிவேடு, ஆவணங்கள், நகைகளை திருப்பித் தர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/93456/Release-of-Guidelines-for-Crop-Loan-Discounts--Full-Details.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா