டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது!

டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை கைது செய்தனர் டெல்லி போலீசார்
கடந்த ஜனவரி 26 அன்று மத்திய அரசு புதிதாக அமல்படுத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் நாடு முழுவதுமிலிருந்து விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது அப்பேரணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை டெல்லி செங்கோட்டை பக்கமாக திசை திரும்பியதால் அங்கு வன்முறையும் ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரின் பெயர் மணீந்தர் சிங் என தெரியவந்துள்ளது. டெல்லி காவல் துறையின் சிறப்பு படைப்பிரிவினர் அவரை பிட்டம் பூராவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டிலிருந்து இரண்டு வாளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
A most wanted person in Red Fort violence case, Maninder Singh (in pics), arrested by Delhi Police Special Cell yesterday in Delhi. Two swords recovered from his house.
— ANI (@ANI) February 17, 2021
(Pic 1 - screengrab from a video released by Delhi Police)
(Pic 2 - accused's pic released by Delhi Police) pic.twitter.com/8Ok8R9ey1Y
கைது மணீந்தரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றி : ANI
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/93733/Delhi-Red-Fort-Violence-related-case-one-man-arrested-by-Delhi-Police-in-Delhi.html
Comments
Post a Comment