ஜேஇஇ முதன்மை தேர்வு: தமிழகத்தின் அஷ்வின் ஆபிரகாம் உள்பட 13 பேர் முதலிடம்

பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின் ஆபிரகாம் உள்ளிட்ட 13 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிபெண்களை பெற்றுள்ளனர். 

ஜேஇஇ முதன்மை தேர்வுகளை எழுத சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பதிவுசெய்திருந்த நிலையில், தேர்வுகள் கடந்த 16ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 334 நகரங்களில்  நடைபெற்றது. தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. 

இந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகின்றன. ஒரே மாணவர் நான்கு முறை வரை தகுதி தேர்வை எழுதலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

அடுத்து ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்வுகளுக்கு பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஆபிரகாம் தகுதித் தேர்வில் 100 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/97167/JEE-Main-Exam-Results-Out-and-13-toppers-who-scored-100-percentile-including-a-topper-from-TN-Ashwin-Abraham.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா