யுஜிசி நெட் தேர்வு 3வது முறையாக ஒத்திவைப்பு - ரமேஷ் பொக்ரியால்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி பேராசியர்களுக்கு நடத்தப்படும் நெட் தேர்வானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்றாவது முறை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்றானது நாடுமுழுவதும் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
?Announcement
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 20, 2021
Keeping in mind the safety & well-being of candidates and exam functionaries during #covid19outbreak, I have advised @DG_NTA to postpone the UGC-NET Dec 2020 cycle (May 2021) exams.#Unite2FightCorona pic.twitter.com/5dLB9uWgkO
ஏற்கெனவே இரண்டுமுறை நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே 2ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த தேர்வு தற்போது மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தேர்வு மீண்டும் நடத்தப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99836/UGC-net-exam-postponed-for-the-3rd-time-due-to-Corona-2nd-wave.html
Comments
Post a Comment