மயிலாடுதுறை: கோடை மழையால் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொடை மழையில் நனைந்து சேதமடைந்தன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்காக 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து 1 லட்சத்தி 85 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 1 லட்சத்தி 60 ஆயிரம் டன் நெல், கிடங்கு மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றம் இன்றும் பெய்துவரும் கோடை மழையால் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/99254/Summer-rains-Damage-to-paddy-bundles-kept-in-the-open.html
Comments
Post a Comment