சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு - யுபிஎஸ்சி அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் மற்றும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையில் 30 வயதுக்கு கீழானோர் மற்றும் சிறுவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99763/UPSC-announced-that-Civil-service-interview-postponed-due-to-corona-spread.html
Comments
Post a Comment