உரங்களை பழையவிலைக்கே வாங்கி கொள்ளலாம் - மத்திய அமைச்சர்

பயிர் சாகுபடிக்கான முக்கிய கூட்டு உரங்கள் பழைய விலைக்கே விற்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.

பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் முக்கிய கூட்டு உரங்களின் விலையை, உர உற்பத்தி நிறுவனங்கள் திடீரென 60 சதவிகிதம் உயர்த்தின. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகளும் அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தன.

image

இந்த நிலையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்டுள்ள வீடியோவில், உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையில் தற்போதைக்கு உரங்களின் விலை உயர்வை நிறுத்தி வைப்பதென முடிவு செய்யப்பட்டதாக கூறியுள்ள அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, விவசாயிகள் பழைய விலைக்கே உரங்களை வாங்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/98811/Minister-Mansukh-Mandaviya-said--No-hike-in-fertilizer-prices.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா