மே 10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - பாரதியார் பல்கலைகழகம்

மே 10 முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என பாரதியார் பல்கலை கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பாரதியார் பல்கலை கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், “மே 10 முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை,முதுகலை படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்” என்று கூறியுள்ளது.
முன்னதாக, கொரோனா முதல் அலை பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் பின்னர் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா 2 வது அலை வேகமாக பரவிய நிலையில் கல்லூரிகளை மூடி ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் பாரதியார் பல்கலை கழகம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/101762/Semester-exams-online-from-May-10--Bharathiyar-University.html
Comments
Post a Comment