கொரோனா 2 வது அலை எதிரொலி :குரூப் - 1 முதன்மை தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வெளியான செய்தியில், “ கொரோனா பரவல் காரணமாக மே 28,29,30 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் - 1 முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. அதே போல ஜூன் 6 இல் நடக்க இருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி பதவிக்கான தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது  இவை மட்டுமன்றி ஜூன் 5 இல் நடக்க இருந்த ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் டேராடூன் கல்லூரியில் 2022ம் பருவத்தில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 21வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா 1 வது அலை காரணமாக மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள் அதன்பின்னர் பாதுகாப்பு நடைமுறைகளுடன் திறக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனா 2 வது அலை தாக்கம் அதிகமானதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. ஆன்லைன் கல்வி நடைமுறையில் உள்ள நிலையில் பாரதியார் பல்கலை கழகம் செமஸ்டர் தேர்வுகளை வரும் 10 ஆம் தேதியில் ஆன்லைன் வழியாக நடத்த முடிவெடுத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/101824/Group---1-Primary-Exam-Postponement.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா