ப்ளஸ் 2 தேர்வு குறித்து நாளைக்குள் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்

ப்ளஸ் 2 தேர்வை எப்போது நடத்துவது என்பது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு தொடர்பாக நாளைக்குள் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து அவர் கூறும்போது, ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து பிஎஸ்பிபி பள்ளியில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், ஆசிரியர் ராஜகோபலன் மீதான புகாரில் உண்மையிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/103676/--2-exam-decision-take-within-tomorrow--Minister-Anbil-Mahesh.html
Comments
Post a Comment