கடலூரில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை மரங்கள்

கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் 100 ஏக்கருக்கும் அதிகமான வாழைமரங்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை இடி மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மலைக்கிராமங்களான எம் புதூர், எஸ் புதூர், கண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை மரங்கள் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டன. அறுவடைக்கு தயராக இருந்த 100 ஏக்கருக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன. அறுவடை நேரத்தில் சிலநிமிடங்கள் வீசிய சூறைக்காற்றால் ஏற்பட்ட பாதிப்பு விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/103426/Banana-trees-affected-by-cyclone-in-Cuddalore.html
Comments
Post a Comment