ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் தற்போதைய சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜெ.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் வாயிலாக மே 24 ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி நடக்க இருந்த ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/101320/JEE-Main-May-2021-Exam-Postponed-Due-To-COVID-19-NTA.html
Comments
Post a Comment