மதுரை: கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 10 டன் நெல் மணிகள் சேதம்

திருமங்கலம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 10 டன் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 300 ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 10 டன் நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு வெளியே விவசாயிகள் மலை போல் குவித்து வைத்துள்ளனர்.

திடீரென அப்பகுதியில் மழை பெய்ததால் நெல் மணிகள் நனைந்து வீணாகியுள்ளன. மேலும் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் மணிகளும் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விரைந்து நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓரிரு தினங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என வேளாண் துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/105342/Madurai-10-tonnes-of-paddy-grains-damaged-due-to-non-opening-of-the-procurement-center.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா