11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை

கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. முன்னதாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் ரத்து செய்யபட்டதால் இந்த கல்வியாண்டில் பதினோராம் வகுப்பு மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது குறித்த நெறிமுறையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை காட்டிலும் கூடுதலாக 10 முதல் 15 சதவிகிதம் வரை இடங்களை அதிகரித்து சேர்க்கையை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடத்திற்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைத்து சேர்க்கை நடத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த பிரிவுக்கு விண்ணப்பிக்கிறார்களோ அந்த பிரிவுடன் தொடர்புடைய பாடங்களில் இருந்தும், கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்தும் கேள்விக்குறி வகை வினாக்களாக கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பிரிவுகள் ஒதுக்கலாம். இதே வாழிகாட்டுதலின் படி பன்னிரண்டாம் வகுப்பு சேர்க்கையையும் நடத்தலாம். ஜூன் மூன்றாவது வாரத்தில் இருந்து பதினோராம் வகுப்புகளை தொடங்கி தொலைத் தொடர்பு முறையில் பாடங்களை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/105665/TN-School-Education-Department-issued-Guidelines-for-Class-Eleven-Admission-in-Tamil-Nadu-Schools-amid-COVID19-and-SSLC-Exam-Was-Cancelled-due-to-Deadly-Virus.html
Comments
Post a Comment