சிபிஎஸ்இ பொதுத்தேர்வை பொறுத்தே +2 பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்- அன்பில் மகேஷ்

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே பாடப்புத்தகம் விநியோகிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
தனியார் பள்ளிகள் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள கல்விக் கட்டண புகார்களுக்காக அமைக்கப்பட்ட குழு வலுப்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்புகளை மேம்படுத்தி விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/104862/Anbil-Mahesh-Poyyamozhi-said-The-decision-on-the--2-public-examination-will-be-based-on-the-CBSE-examination.html
Comments
Post a Comment