சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரிடத்திலும் நிகழும் பதட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு தகுந்த முறையில் மதிப்பெண் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான சூழல் அமைந்தவுடன் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாநில பாட நூல் திட்டத்தின் கீழ் பொது தேர்வை நடத்துவதா? என்பது குறித்த ஆலோசனை நாளை நடைபெற உள்ளது. CBSE தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/104916/Central-government-of-Indian-Cancelled-class-12-exam-for-the-academic-year-2020-and-2021-due-to-COVID19.html
Comments
Post a Comment