ஆன்லைன் கல்விக்கு ஏற்ப எளிதான +2 பொதுத்தேர்வு அவசியம்: கல்வியாளர் ரமேஷ் பிரபா

பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை அளிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்வியாளர் ரமேஷ் பிரபா ஆலோசனை கூறியுள்ளார். அவர் பேசியபோது, ‘’தேர்வுகளை ரத்து செய்துவிட்டு ஏதேனும் ஒரு அடிப்படையில் மதிப்பெண்களை இடும்போது அது சரியாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். அதனால் காலம்கடந்தாலும் முறைப்படுத்தப்பட்ட, எளிமைப்படுத்தப்பட்ட, இன்றைய ஆன்லைன் கல்விக்கு ஏற்றாற்போல் தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்விக்கான சேர்க்கையை நடத்தினால் சரியாக இருக்கும்’’ என்று கூறுகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/104996/Educator-Ramesh-Prabha-advice-to-have--2-board-exam.html
Comments
Post a Comment