+2 தேர்வு ரத்து அல்லது நடத்துவது : மாநில அரசுகளின் நிலைப்பாடு என்ன?

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்ற முடிவை எடுக்காமல் உள்ளன சில மாநிலங்கள். கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் ஆரோக்கிய நலன் கருதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு CBSE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது. அதனை உச்ச நீதிமன்றமும் வரவேற்றிருந்தது. அதோடு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்க உள்ளது அரசு என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. 

அதையடுத்து இந்தியாவில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்ற நிலைப்பாட்டை பல்வேறு மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதில் சில மாநிலங்கள் தேர்வை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. 

தேர்வை ரத்து செய்துள்ள மாநிலங்கள்!

மத்திய அரசின் முடிவை தொடர்ந்து ராஜஸ்தான், கோவா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, உத்தராகண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளன. 

தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வரும் மாநிலங்கள்!

அசாம், பஞ்சாப், ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தேர்வை ரத்து செய்வதா? அல்லது நடத்துவதா? என்ற ஆலோசனையில் உள்ளன. தமிழ்நாட்டில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. 

அதே நேரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்கள் நிலைமை சீரடைந்ததும் தேர்வை நடத்த திட்டமிட்டு வருகிறது. தேர்வு, கல்வி என அனைத்தையும் கடந்து மாணவர்களின் ஆரோக்கிய நலன் முக்கியம் என்பதில் அரசுகள் கவனம் வைத்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/105274/Various-State-Government-of-India-s-Decision-on-to-hold-or-Cancel-Class-Twelve-Board-Examination.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா