மேட்டூர் அணையை திறந்த முதல் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், '5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்' என்று தெரிவித்தார்.

ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் 5.21 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாசனவசதி பெறுகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணையை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்து, காவிரியாற்றில் மலர் தூவினார்.

image

முதல் கட்டமாக, விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கன அடி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுள்ளனர்.

மேட்டூர் அணையை திறந்த முதல் திமுக முதல்வர் என்ற பெருமையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். இதுவரை அமைச்சர் மட்டுமே அணையை திறந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு இவ்வழக்கம் மாறியது குறிப்பிடத்தக்கது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/106108/M-K-Stalin--first-DMK-Leader-to-open-Mettur-Dam.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா