‘நீட்’ எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற சட்டமன்றத்தில் முடிவு எட்டப்படவேண்டும்: சீமான்

மனுதர்மத்தின் நவீன வடிவான ‘நீட்’ தேர்வை முற்று முழுதாகத் துடைத்தெரிய இன்றைக்குக் கூடியிருக்கிற முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்திலேயே ஒரு முடிவு எட்டப்படவேண்டுமென நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பன்முகத்தன்மைக்கெதிராகவும், கூட்டாட்சிக்கெதிராகவும் கொண்டுவரப்பட்ட நீட் எனும் மத்தியத்தர ஒற்றைத்தகுதித்தேர்வு மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் உழைக்கும் ஆதி தமிழ்க்குடிகளின் பிள்ளைகளை மருத்துவராகவிடாது தடுக்கும் மனுதர்மத்தின் நவீன வடிவான ‘நீட்’ தேர்வை முற்று முழுதாகத் துடைத்தெரிய இன்றைக்குக் கூடியிருக்கிற முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்திலேயே ஒரு முடிவு எட்டப்படவேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலத் தன்னாட்சியையும், மாநிலத் தன்னுரிமையையும் நிலைநாட்ட, மண்ணின் மக்களின் நலவாழ்வை உறுதிசெய்ய, மருத்துவராகும் பெருங்கனவை வர்க்க வேறுபாடின்றி யாவருக்கும் உறுதிசெய்ய ‘நீட்’ எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/107079/A-decision-must-be-reached-in-the-assembly-session-to-completely-remove-the----NEET----hurdle--Seeman.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா