மதிப்பெண்களில் திருப்தியடையாத தேர்வெழுத விரும்பும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், முந்தைய வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்பட உள்ளன.

இந்நிலையில், மதிப்பீட்டு முறையில் ஒதுக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும், அவர்கள் விரும்பினால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பு தேர்வு எழுதலாம் எனவும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/107717/Special-exams-for-willing-CBSE-students.html
Comments
Post a Comment