மேகதாது அணை விவகாரம்: தமிழகம் முழுவதும் நாளை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்காமல் மவுனம் காக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

இணையவழியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் பெறும் நடைமுறை தொடர வேண்டும் என்றார். மேகதாது அணை குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகள் விவசாயிகள் கொண்ட கூட்டத்தை நடத்தவும் வலியுறுத்தினார். மேகதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தாமல் மவுனம் காக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் விவசாயிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவர் என்றும் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/107014/tomorrow-condemning-the-Cauvery-Management-Authority-for-not-blocking-the-construction-of-the-mekedatu.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா