ராணுவம், கடற்படை, விமானப் படைகளின் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி!

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த இணையவழி கருத்தரங்கை, புதிய தலைமுறை அறக்கட்டளையின் வேலைவாய்ப்பு வழிகாட்டு மன்றம் தொடங்கியுள்ளது.
வரும் 23 ஆம் தேதி வரை தினமும் மாலை ஐந்தரை மணி முதல் 7.30 மணி வரை இந்த இணையவழி கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும். சென்னை, மதுரை, கோவை, தஞ்சை, விருதுநகர், கரூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருப்பூர், வேலூர், நாமக்கல் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த, 16 முதல் 22 வயதுடையவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கர்னல் கே.மலையப்பன் ராணுவ வேலைவாய்ப்புகள் குறித்தும், கடற்படை வேலைவாய்ப்புகள் குறித்து கமாண்டர் ராதாகிருஷ்ணனும், விமானப்படையின் வேலைவாய்ப்புகள் குறித்து அட்வகேட் ஆறுமுகமும் எடுத்துரைக்கின்றனர். ஊரடங்கு முழுமையாக முடிந்த பின், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நேரடிப் பயிற்சிகள் நடைபெற உள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/106967/Army--Navy--Air-Force-Employment-Guide-Program-.html
Comments
Post a Comment