விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : மத்திய வேளாண் அமைச்சர்

தொடர் போராட்டங்களை நடத்தி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாய சங்கத்தினர் 7 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாரதிய கிசான் சங்கம் தலைவர் நரேஷ் திகாயத் அழைப்பின் பெயரில் மேற்கு உத்தரப் பிரதேச பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் காசிப்பூர் போராட்ட தளத்திற்கு டிராக்டர்களில் வந்துள்ளனர். இதனால் அடுத்த சில நாட்களில் போராட்டம் மேலும் தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக விவசாயிகள் கூறியிருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் தோமர், 11 முறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதும் நியாயமான கோரிக்கைகள் வந்தால் நிச்சயமாக கலந்து ஆலோசிப்போம் என்றும் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/107663/Ready-to-negotiate-with-farmers-says-Tomar.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா