செப்டம்பர் 11இல் முதுநிலை மருத்துவ நீட் நுழைவுத் தேர்வு

முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11இல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்திருக்கிறார்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்வர் 12ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிமுதல் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது முதுநிலை நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த 2 நாட்களில் முதுகலை மற்றும் இளநிலை நீட் நுழைவுத் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/109437/Post-Graduation-NEET-exam-will-be-conducted-on-September-11.html
Comments
Post a Comment