2018-ல் 5,763... 2019-ல் 5,957... - இந்தியாவில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை!

இந்தியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டைவிட 2019-ஆம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்திருப்பது புள்ளி விவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய வேளாண் துறை அமைச்சகம், இந்தியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு 5,763 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு 5,957 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகமாக கடந்த 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,680 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 2,739 ஆக இருந்தது.

இதற்கு அடுத்த இடத்தில் கர்நாடக மாநிலத்தில் 1,365 பேர் கடந்த 2018-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு 1,331 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஆந்திராவில் 2018 ஆம் ஆண்டு 365 பேர் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்து 628 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலங்கானா மாநிலத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக 2018-ஆம் ஆண்டு 900 பேர் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு 496 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இரண்டு ஆண்டுகளிலும் தலா 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மத்திய அரசு வழங்கக்கூடிய புள்ளிவிவரங்களில் தெரிகின்றது.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட விவசாயத்தை பிரதானமாக நம்பி இருக்கக்கூடிய மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை 100-க்கு மேல் இருந்து வருகிறது. அதேநேரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய விவசாய மாநிலமான ஹரியானாவில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற விஷயத்தையும் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி உதவி வழங்குவது, சுலபமாக கடன் பெறுவதற்கான திட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு சார்பில் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது.

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/110586/The-number-of-farmers-committing-suicide-is-increasing-in-India-and-in-2018-and-2019-totally-11720-farmers-committed-suicide.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா