2021-22-ம் கல்வியாண்டில் 2 பருவங்களாக பொதுத்தேர்வு - சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 2021- 22ஆம் கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த பாடத்திட்டத்தை இரண்டாக பிரித்து முதல் பருவம், இரண்டாம் பருவம் என தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு பாடப்பருவ முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வு நடத்தப்படும் எனவும் சூழல் சரியாகும் வரை ஆன்லைன் வழி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் சிபிஎஸ்இ கூறியுள்ளது. பொதுத் தேர்வு நடத்துவதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/108680/Public-exam-for-2-Seasons-in-2021-22---CBSE.html
Comments
Post a Comment