600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பிளஸ் 2 வகுப்புக்கான மதிப்பெண்கள் பட்டியல் 19-ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் வெளியாகி உள்ளன. வரும் 22-ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையத்தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ’’+2 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முதன்முறையாக தசம எண்களில்(decimal) வெளியிடப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே இவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது. 100% தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. வகுப்புக்கு வராத 39000 தனித்தேர்வர்களும் தேர்ச்சியடையவில்லை. மாணவர்கள் மதிப்பெண்களில் திருப்தியடையவில்லை என்றால் மீண்டும் தேர்வெழுதிக்கொள்ளலாம்.

+2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியல் வெளியீடு 

551-600 மதிப்பெண்கள் வரை 30,600 மாணவர்கள் எடுத்துள்ளனர். 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு 4,35,973 மாணவிகளும், 3,80,500 மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். பொதுப்பாடப்பிரிவில் 7,64,593 பேரும், தொழிற் பாடப்பிரிவில் 51,880 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்’’ என்று கூறியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/110014/Anbil-Mahesh-Poyyamozhi-press-meet-after-releasing--2-marksheet.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா