ஆன்லைன் வகுப்பு: முடிகளை பிய்த்து சாப்பிட்ட மாணவி - ஆட்சியரிடம் அறிக்கை கேட்கும் ஆணையம்

விழுப்புரம் அருகே ஆன் லைன் வகுப்பால் ஏற்ப்பட்ட மனச்சோர்வு காரணமாக முடிகளைப் பிய்த்துச் சாப்பிட்ட பள்ளி மாணவி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.

கொரோனா தொற்றால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் நகரில் வசிக்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்று வருகிறார். அவரது பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால் அம்மாணவி, தனது பாட்டியுடன் வீட்டில் இருந்து வந்த சூழலில் அம்மாணவிக்கு திடீரென வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனே அந்த மாணவியை அவரது பெற்றோர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

image

இதனை தொடர்ந்து மருத்துவர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடந்த வாரம், அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றினர். மேலும் ஆன்லைன் வகுப்புகளால் பல்வேறு குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதால் தனிமையில் குழந்தைகள் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாவதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

image

இந்நோயை மருத்துவத் துறை Rapunzel Syndrome எனப் பெயரிட்டுள்ளது தெரியவந்ததுள்ளது. இதையடுத்துச் சிறுமி, பெற்றோர்கள் மூலம் மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

image

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நேற்று விழுப்புரம் ஆட்சியர் மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், அச்சிறுமிக்கு அளிக்கப்பட்ட மனநல ஆலோசனைகள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/108228/15-year-old-girl-surgery-to-get-one-kg-of-hairball-removed-from-her-due-to-online-classes.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா