புதுக்கோட்டை: நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக நெல் கொள்முதல் செய்யாததால், 25 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் தேங்கி நிற்பதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் கோடை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளின் பயனுக்காக, கடந்த மே மாதம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்களை விற்பனை செய்வதற்காக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து குவித்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அங்கு நெல் கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

image

இதனால் 25,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், மழை பெய்தால் பாதிப்படையும் சூழல் உள்ளதால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் இன்று ரெகுநாபுரத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரெகுநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/110129/Pudukottai-Farmers-protest-demanding-purchase-of-paddy-bundles.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா