தொழிற்படிப்பு: முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு

தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நீதியரசர் முருகேசன் குழு அறிக்கை அளித்தது.
தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவு பற்றி ஆராயக் குழு அமைக்கப்பட்டது. தொழிற்படிப்புகளில் உள் ஒதுக்கீடு அளிப்பதா அல்லது சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதா என இந்த குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் அறிக்கையை முருகேசன் குழு முதல்வரிடம் தற்போது சமர்பித்திருக்கிறது.
அதன்படி, நீதியரசர் முருகேசன் குழுவின் பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/110188/Report-submitted-to-Chief-minister-about-professional-courses-in-Tamilnadu.html
Comments
Post a Comment