மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு லட்சத்தை கடந்தது மாணவர் சேர்க்கை

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது.

சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 281 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணாக்கர்கள் சேர்க்கை, கடந்த மாதம் 14 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 757 மாணாக்கர்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இவர்களில் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து வெளியேறிய மாணாக்கர்கள் 19 ஆயிரத்து 38 பேர் ஆவார்கள். மாநகராட்சிப் பள்ளிகளில் 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, மேலும் ஒரு மாதத்துக்கு நடைபெறும் என மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/110212/Admission-in-corporation-government-schools-crossed-one-lakh-in-Tamilnadu.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா