மத்திய அரசு கட்சியால் நடத்தப்படவில்லை; கம்பெனியால் நடத்தப்படுகிறது: ராகேஷ் டிக்கைட்

மத்திய அரசு ஒரு கட்சியால் நடத்தப்படவில்லை, அது கம்பெனியால் நடத்தப்படுகிறது என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்

இது தொடர்பாக பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், "மத்திய அரசை ஒரு அரசியல் கட்சி நடத்தவில்லை, ஒரு நிறுவனம் நடத்துகிறது. அதனால்தான் எந்த விவாதமும் நடத்தப்படுவதில்லை" என்றார். மேலும், "அரசு, பண்ணை சட்டங்களை ரத்து செய்ய மாட்டோம், ஆனால் விவாதத்திற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறி ஒரு முரண்பாடான நிபந்தனையை முன்வைக்கின்றனர்" எனத் தெரிவித்தார்

கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாதங்களாக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/108594/Govt-being-run-by-a-company--not-a-party--Tikait-on-farm-law-talks.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா