மகனின் சைக்கிளை உழவுக்கு பயன்படுத்திய விவசாயி: சைக்கிளும் நிவாரணமும் வழங்கிய நிதி அமைச்சர்

திருத்தணி அருகே வறுமையின் காரணமாக தனது மகனின் சைக்கிளை உழவு இயந்திரமாக பயன்படுத்துவது குறித்து சமீபத்தில் செய்தி வெளியானது. இதனையடுத்து, அந்த செய்தியை அறிந்த தமிழக நிதி அமைச்சர் உத்தரவின் பேரில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் சிறுவனுக்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்தும், நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்துள்ள அகூர் கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜன். விவசாயியான இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பங்கி பூ விவசாயம் செய்து வருகின்றார். பெரும்பாலான விவசாயிகள் வறுமையில் சிக்கித் தவிப்பது வாடிக்கையாகி வரும் சூழலில் இவரும் வறுமையின் பிடியில் சிக்கி உழவுப் பணிக்கு பயன்படுத்த இயந்திரங்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

image

இதனால் தனது மகன் தனஞ்செயனின் சைக்கிளையே உழவு இயந்திரமாக பயன்படுத்தி அதனை தனது 11 வயது மகனை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு உழவு பணிகளை மேற்கொண்டு வந்தார். 11 வயது சிறுவனின் சைக்கிளைக் கொண்டு விவசாயம் செய்து வருவது குறித்து அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகம் மூலம் செய்தி பரவியது.

image

இதனையடுத்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜனின் உத்தரவின் பேரில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர் சி.எச்.சேகர், இன்று அகூர் கிராமத்திற்கு வருகை தந்து சிறுவனுக்கு சைக்கிளும் அவரது குடும்பத்தாருக்கு அரிசி பருப்பு எண்ணெய் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் நிதி உதவியும் வழங்கினார்.

11 வயது சிறுவனின் சைக்கிளை உழவு இயந்திரமாக பயன்படுத்தியது குறித்து செய்தி அறிந்து திமுக சார்பில் வழங்கப்பட்ட சைக்கிள், நிவாரணம் மற்றும் நிதி உதவி வழங்கியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/108748/Farmer-who-used-his-sons-bicycle-for-plowing--The-Minister-of-Finance-who-provided-the-bicycle-and-relief.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா