திருவாரூர்: நீட் தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் செலுத்திய ஆட்சியர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், தன் விருப்ப நிதியிலிந்து ரூ.75,000 தொகையை, ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்விற்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கும், மாணவர்களுக்கான உதவித்தொகையாகவும் வழங்கி உதவியுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருப்பதால், இப்போதைக்கு மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு தயாராக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆகவே அவர்களும் தயாராகி வருகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகவும் சவாலாக இருப்பதாக கூறப்பட்ட காரணத்தினால், அரசு சார்பில் அவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராக இலவச பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி திருவாரூரில் அரசு சார்பில் நீட் தேர்வுக்கு இலவசமாக தயாராகிவரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, அம்மாவட்ட ஆட்சியர் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை தன்னுடைய விருப்ப நிதியிலிருந்து வழங்கியுள்ளார்.

நிதியளித்த பின்னர் ஆட்சித்தலைவர் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், “திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழக அரசின் சார்பில் இணைய வழிப்பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் 505 மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற்று வருகின்றனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணவர்கள் நீட் தேர்விற்கான விண்ணப்பக்கட்டணம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 63 மாணவர்கள் இந்த உதவித்தொகையால் பயன் பெறுகின்றனர். விண்ணப்பக் கட்டணம் மட்டுமன்றி பிற்பட்டுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டுத்தப்பட்டோர் வகையை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1400/- எனவும்; பட்டியல் வகுப்பைச்சார்நத மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.800/- எனவும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.75,000/- எனது விருப்ப நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது” எனக்கூறினார்.

தொடர்ந்து மாணவர்களிடம், “இந்தாண்டு நீட் தேர்வானது எதிர்வரும் 12.09.2021 ஞாயிறன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 06.08.2021 கடைசி நாளாகும். நம் திருவாரூர் மாவட்டத்திற்கு அருகிலுள்ள தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், கடலூர், சிதம்பரம், திருச்சி, ஆகிய இடங்களில் நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண மக்கள் பெற்றெடுத்த பிள்ளைகளாகிய உங்கள் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற பிள்ளைகளாகவும் திகழ வேண்டும். அந்தவகையில், இந்த நீட்தேர்வினை எந்தவித தயக்கமின்றி தேர்வில் வெற்றிபெறுவதை ஒன்றே குறிக்கோளாக கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற்றிட வேண்டும்” என கூறினார்.
இதுதொடர்பாக ட்வீட்டும் செய்திருக்கிறார் ஆட்சியர் காயத்ரி. தனது ட்வீட்டில், “திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தன்விருப்ப நிதியிலிந்து அரசு பள்ளிகளில் பயிலும், 63 மாணவ,மாணவிகளுக்கு நீட் தேர்விற்கான விண்ணப்பக் கட்டணத்தினை வழங்கிய நிகழ்வு” எனக்குறிப்பிட்டுள்ளார் அவர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தன்விருப்ப நிதியிலிந்து அரசு பள்ளிகளில் பயிலும், 63 மாணவ,மாணவிகளுக்கு நீட் தேர்விற்கான விண்ணப்பக்கட்டணத்தினை வழங்கிய நிகழ்வு... #Collectorthiruvarur. pic.twitter.com/1RISMHxcXy
— Collector Thiruvarur (@CollectorTVR) July 28, 2021
இதற்கிடையில் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஆட்சியரிடம், “திருவாரூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்கள் இல்லாத காரணத்தினால் அண்டை மாவட்டங்களான தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் மாணவர்களின் நலன் கருதி சிறப்பு பேருந்து வசதியை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விஜய் குமார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/111074/Thiruvarur-collector-pays-Rs-75-000-to-government-school-students-who-are-preparing-for-NEET-exam.html
Comments
Post a Comment