பொதுஇடங்களில் முகக்கவசம் அணியும் படி வற்புறுத்தும் சிறுவன் - வைரலாகும் வீடியோ

பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது சிறுவனுக்கு கூட தெரிந்திருக்கிறது என்ற கருத்துடன் ஒரு காணொலி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சந்தை போன்ற ஒரு பகுதியில், கையில் கம்புடன் ஓரமாக நின்று கொண்டிருக்கும் ஒரு சிறுவன், வருவோர், போவோர் எல்லாம் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பதை உன்னிப்பாக கவனிக்கிறான். முகக்கவசம் அணிந்து வருபவர்களை கண்டுகொள்ளாத அந்த சிறுவன், கொரோனா நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, ஹாயாக நடைபோட்டு வருபவர்களை தடுத்து நிறுத்துவது போல கம்பை நீட்டி, முகக்கவசம் அணியும்படி வற்புறுத்துகிறான்.
பலர் அவனது செய்கைக்கான காரணத்தை புரிந்து வெட்கிச் செல்லும் நிலையில், ஒரு சிலரோ, அந்த சிறுவனையே அடிப்பதுபோல பாவனை செய்து விட்டு, அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்கள். சொல்லியும் திருந்தாத மனிதர்களால், சமூகத்திற்கு தான் கேடு. அதற்கு கொரோனாவே சான்று.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/108786/The-boy-who-insists-on-wearing-a-mask-maid-COVID19-Spread.html
Comments
Post a Comment