“நேரடி கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்களை அமைக்க வேண்டும்”- உயர்நீதிமன்றம்

மழையால் விளைப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் வகையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்களை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த மழையால் விளைபொருட்கள் நனைந்து வீணானது குறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அதிகளவில் சாகுபடி நடக்கும் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் துவங்குவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகத்தில் 468 குடோன்கள் இருப்பதாகவும், அதன் மூலம் 3 லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விளைநிலங்களுக்கே சென்று வேன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பருவம் தவறி பெய்யும் மழையில் விளை பொருட்கள் வீணாகாமல் பாதுகாக்க நேரடி கொள்முதல் நிலையங்களில், நிரந்தர கட்டுமானங்கள் அமைப்பது குறித்து அரசு யோசிக்க வேண்டும் என ஆலோசனை கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/109883/Permanent-constructions-should-be-set-up-in-direct-procurement-centers-High-Court-Gives-idea-to-the-Government-of-Tamil-Nadu.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா