டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்குழு சார்பில் “விவசாயிகள் நாடாளுமன்றம் ”: ராகேஷ் திக்கைட்

டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் சார்பில் தனியாக நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைட் தெரிவித்தார்.

த்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள், தனியாக நாடாளுமன்ற அமர்வுகளை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடத்தவுள்ளதாக பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைட் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர், “ நாடாளுமன்றத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தரில் “விவசாயிகள் நாடாளுமன்றத்தை” நடத்தவுள்ளோம்.

ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் முடிவடையும் நாடாளுமன்ற மழைக்கால அமர்வின் நடவடிக்கைகளையும் விவசாயிகள் கண்காணிப்பார்கள்” என்று கூறினார். விவசாயிகள் ஜந்தர் மந்தரில் கடந்த வியாழக்கிழமையன்று தங்களின் போராட்டத்தைத் தொடங்கினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/110436/Will-hold-our-own-Parliament-sessions-at-Jantar-Mantar--Rakesh-Tikait.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா